வடிவேலு மகளா இது? கழுத்து நிறைய தங்க நகைகளுடன் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான் நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ராஜ்கிரணின் எடுபிடி வேலையாளாக சினிமாவில் நுழைந்து கமல்ஹாசனை கவர்ந்து பின்னாளில் தமிழ்நாடு ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர்.

ஒரு காலத்தில் வடிவேலு காமெடி காட்சிகள் இருந்தால் மட்டுமே திரையரங்குகளுக்கு கூட்டம் வரும். மேலும் அவருடைய காமெடி காட்சிகளுக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

இப்படி தமிழ் சினிமாவை தன்வசம் வைத்திருந்த வடிவேலு 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு சரிவை சந்திக்க ஆரம்பித்தார். பெரிய அளவு பட வாய்ப்புகளும் இல்லை, அவர் மீது அதே நேரத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

கடைசியில் ஷங்கர் தயாரிப்பில் ஏற்கனவே வெளியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அதிலும் இயக்குனர் சிம்புதேவனுடன் தகராறு செய்ய, ஷங்கர் நடிகர் சங்கப் படியேற, விழுந்தது ரெட்கார்டு.

அதன் பிறகு ஒரு படத்தில் கூட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார். கிடைத்த படங்களில் குணச்சித்திர நடிகராக வலம்வந்தாரே தவிர காமெடி நடிகராக வலம் வரவில்லை. வடிவேலு சினிமாவில் பெரியாளாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தை அவ்வளவாக வெளியே காட்டியதில்லை.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய மகளான கார்த்திகாவுக்கு திருமணம் செய்து வைத்தார் வடிவேலு. அப்போதுதான் இவர் வடிவேலுவின் மகள் என்பதே பலருக்கும் தெரிந்தது. அவர்களுடைய திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

vadivelu-daughter-karthika
vadivelu-daughter-karthika
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்