வாலி படத்தில் முதலில் சிம்ரன் இல்லையாம்.. ஒரே நாள் படப்பிடிப்பில் ஓட்டம் பிடித்த பிரபல நடிகை

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999-ல் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளிவந்த படம் வாலி. இந்த படத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் தம்பியின் மனைவியை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்பதுதான் கதை. சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியில் சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

அதாவது சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் கீர்த்தி ரெட்டி தான் நடிக்க இருந்தாராம். ஒரு நாள் படப்பிடிப்பு நடந்ததாம். ஆனால் அவர் கதாபாத்திரம் அந்த அளவுக்கு பொருந்தவில்லை என்பதால், சிம்ரனை உடனடியாக புக் செய்து விட்டனர்.

கீர்த்தி ரெட்டி முன்னதாக தேவதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதற்குப் பின்னர் இனியவளே, நினைவிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

keerthi-reddy-cinemapettai
keerthi-reddy-cinemapettai

அதற்குப் பின்னர் எந்த ஒரு தமிழ் படமும் அவருக்கு அமையவில்லை. நல்லவேளை இவங்கள போடல என்று ரசிகர்கள் தற்போது பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.

Next Story

- Advertisement -