கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை தெரியாத 5 சாதனைகள்.. வியப்பான சாதனையை செய்த யுவராஜ் சிங்

கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு புதுமையான சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை பல சாதனைகளை நாம் எளிதாக பார்த்திருப்போம், கேட்டிருப்போம். அப்படி இருக்கையில் கேள்விப்படாத 5 சாதனைகள்.

செய்யது அஜ்மல்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர். இவர். இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஒரு “மேன் ஆப் தி மேட்ச்” அவார்ட் கூட வாங்கியது இல்லையாம். பாகிஸ்தான் அணிக்காக இவர் 110 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளார்

ராகுல் டிராவிட்: இவர் இந்தியாவின் ஸ்கோர் டெஸ்ட் போட்டிகள் 0/1 என்று இருக்கையில் 18 முறை களமிறங்கி, இந்தியாவிற்காக விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளார் .  இதனாலேயே இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சுவர் என்று பெயர் வந்தது

பங்களாதேஷ்: வெஸ்ட் இண்டீஸ் அணியை, அவர்களுடைய சொந்த மண்ணில் ஒருநாள் தொடரையும், இருபது-20 ஓவர் தொடரையும் வெற்றி பெற்று “ஒயிட் வாய்ஸ்” செய்த ஒரே அணி பங்களாதேஷ். இந்த ஒயிட்வாஷ் சாதனையை இதுவரை வேறு எந்த அணியும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நிகழ்த்தியதே கிடையாது

யுவராஜ் சிங்: இவர் 20 ஓவர் போட்டிகளில் பவுண்டரிகளை விட அதிக சிக்சர்களை அடித்து உள்ளார். 61பவுண்டரியும், 63 சிக்சர்களையும் பறக்க விட்டுள்ளார். இவர் மற்றும் ஒரு சாதனையாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 பந்துகளில், 6 சிக்சர்கள் விளாசியுள்ளார். இந்த சாதனை அனைவருக்கும் தெரிந்த ஒன்று

ஹசிம் ஆம்லா: தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரரான இவர் 70 அல்லது அதற்கு அதிகமான ரன்களை அடித்த போட்டியில் இதுவரை தென் ஆப்பிரிக்கா தோற்றதே கிடையாதாம். இவர் டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு நிறைய வெற்றிகளை தேடித் தந்ததுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்