கேங்க் ரேப், தீண்டாமை என மிரள வைக்கும் நெஞ்சுக்கு நீதி.. விஜயராகவனாக புது அவதாரம் எடுத்த உதயநிதி

பாலிவுட்டில் மெகா ஹிட்டடித்த ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் படம் தான் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக முதல்முதலில் போலீஸ் கெட்டப்பில் மிரள வைத்திருக்கிறார். சமுதாயத்தில் நிலவும் கேங்க் ரேப், கொலை, தீண்டாமை, சாதி ஏற்றத்தாழ்வுகளை மையப்படுத்தி அதனை வெளிப்படையாக இறங்கி அடித்துக் கூறும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் முழு அரசியலில் ஈடுபட போவதால் கடைசி கடைசியாக ரசிகர்களிடம் அழுத்தமாக சில விஷயங்களை ஆணித்தரமாக பதியவைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் சமுதாயத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை வரிசையாக பட்டியல் போட்டு படமாக்கி உள்ளார்.

எல்லாரும் சமம் என்றால் யார் தான் இந்த உலகத்திற்கு ராஜா என்ற வசனம் வரும் போது டாக்டர் அம்பேத்கரை காட்டுவது, அதன் பிறகு வெட்டியான் வேலை பார்ப்பவர்களை பிணத்தை எரிக்க மட்டுமே விடுவார்கள், பிணமாக எரிய விட மாட்டார்கள் என இப்படி சாவில் கூட சாதி பார்க்கும் சமுதாயத்தையும், தாழ்த்தப்பட்டவர்கள் குளத்தில் குளிப்பது தீட்டு, ஆனால் உயர் சாதிக்காரர்கள் குளித்தால் அழுக்காகாது என்ற எண்ணமும் இங்கு வேரூன்றி கிடக்கிறது.

அதைப்போல் பள்ளிக்கூடத்திலும் மதிய உணவு சமைக்கும் கீழ்ஜாதி பெண் சமைப்பதை அவளது வீட்டு பன்றிகளுக்கும் பிள்ளைகளுக்கும் போட சொல்லும் தீண்டாமை, உயர் வர்க்கத்தின் அட்டூழியத்தை இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் வன்மையாக காட்டுகிறார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து படித்து விட்டு போலீஸ் அதிகாரியாக ஊர் திரும்புகிறார்.

இங்கு வந்து பார்த்தால் சாதி ஏற்றத்தாழ்வுகளால் அடிமையாக நடத்துவதும், கூட்டுப் பாலியல் வன்முறை போன்றவையெல்லாம் அசால்டாக நடப்பதால் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தலித் பெண்களுக்காக சட்டப்படி நியாயம் கிடைக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் வெறிகொண்டு தன்னுடைய அனல் பறக்கும் விசாரணையை துவங்குகிறார்.

இவருடன் பிக் பாஸ் ஆரி அர்ஜுனன் உதயநிதி ஸ்டாலின் கூட படித்தவராக இருக்கும் நிலையில், ஆரி இறந்துபோன அந்த தலித் பெண்களுக்காக இளைஞர்களோடு சேர்ந்து உதயநிதி ஸ்டாலினின் விசாரணையை நம்பாமல் அவர்கள் தனியாக அசுர வேட்டையை நடத்த துவங்குகின்றனர்.

இப்படி சாக்கடையில் இறங்கினால் தான் உண்மையை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அதில் இறங்கும் முதல் ஆள் நான்தான் என்று துணிச்சலுடன் நீதிக்காகவும் சட்டத்தை நம்பி உண்மையைக் கண்டுபிடித்த உதயநிதி ஸ்டாலின், போலீஸ் கெட்டப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தில் கடைசி கடைசியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சி நடித்திருக்கிறார் என்று இந்த டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

Next Story

- Advertisement -