வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சர்வைவரில் களமிறங்கிய 2 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்.. எல்லாமே பிக்பாஸின் அட்ட காப்பிதான்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சர்வைவர் என்கின்ற நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு காடர்கள், வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்குக் கொடுக்கும் டாஸ்க்களின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுவரை ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் இந்திரஜா ஆகிய இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக இனிகோ பிரபாகர் மற்றும் வனேசா இருவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர். வனேசா காடர்கள் பிரிவிலும், இனிகோ பிரபாகர் வேடர்கள் பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடிகர் இனிகோ பிரபாகர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபலம் தான். இவர் பூ என்ற படத்தில் கதாநாயகிக்கு கணவராகவும், ரம்மி  என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் மற்றொரு கதாநாயகனாகவும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைப்போல் வனேசா ஒரு மலேசிய மாடல். இவர்கள் இருவரும் சர்வைவர் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இரண்டு வாரம் கழித்து நிகழ்ச்சிகள் போட்டியாளராக நுழைவது சக போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைப் போன்றுதான் பிக்பாஸிலும் நிகழும்.

survivor-wild-card-entry-cinemapettai
survivor-wild-card-entry-cinemapettai

இது மட்டுமில்லாமல் தற்போது சர்வைவல் நிகழ்ச்சியில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்று ஒவ்வொரு போட்டியாளரும் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளது. மீண்டும் சர்வைவர் போட்டியாளர்களை கிடையே சலசலப்பை தூண்டி விடுகின்றனர்.

இதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிகழும் சம்பவம் என்பதால் சர்வைவல் நிகழ்ச்சி அப்படியே பிக்பாஸ் நிகழ்ச்சியை அட்ட காப்பி அடிக்கிறது என்பதை ரசிகர்கள் சர்வைவர் நிகழ்ச்சியை கழுவி ஊற்றினாலும், அவர்கள் வித்தியாசமான கோணத்தில் யோசித்து நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டுசெல்ல தவறிவிடுகின்றனர்.

- Advertisement -

Trending News