வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அவர் இஷ்டத்திற்கு வர முடியாது.. கோபத்தில் சாய்பல்லவி இடத்துக்கு வந்த திரிஷாவும் எஸ்கேப்

ராகவா லாரன்ஸ் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் இயக்குனர் வாசு இயக்கி வரும் சந்திரமுகி 2 திரைப்படமும் ஒன்று.

ஏற்கனவே வாசு இந்த படத்தின் முதல் பாகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எடுத்திருந்தார். ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்த அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இப்படத்தின் கதையை முதலில் வாசு நடிகை சாய் பல்லவியிடம் தான் கூறியிருக்கிறார். ஆனால் கதையில் இதை மாற்றுங்கள், அதை மாற்றுங்கள் என சாய் பல்லவி அதிக பிரசிங்கித்தனமாக நடந்து கொண்டதால் அவருக்கு பதில் திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்போது த்ரிஷாவும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். இதற்கு முக்கிய காரணம் ராகவா லாரன்ஸ் தான் என்று கூறப்படுகிறது அதாவது அவர் இப்போது ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் அவரால் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வர முடியவில்லையாம். மேலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அவருடைய இஷ்டத்திற்கு வந்து செல்கிறாராம். இது படப்பிடிப்பிற்கு சில இடைஞ்சல்களையும் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் அவர் வந்து செல்லும் நேரத்திற்கெல்லாம் திரிஷா வந்து நடித்துக் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார். இதனால் கடுப்பான த்ரிஷா அவர் இஷ்டத்துக்கு என்னால் வந்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டு படத்திலிருந்து விலகி விட்டாராம். இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்காத வாசு தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையில் இருப்பதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News