காத்துவாக்குல 2 காதல் படத்தின் மொத்த வசூல்.. நன்றியை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காற்றுவாக்கில் 2 காதல். விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா போன்ற படு பிசியான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் நயன்தாராவின் கண்மணி கதாபாத்திரத்தை விட சமந்தாவின் கதீஜா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் வெளியாகியுள்ளது.

காத்துவாக்குல 2 காதல் படம் உலகம் முழுவதும் 66 கோடி வசூல் செய்ததாக விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நீங்கள் வாங்கிய ஒவ்வொரு டிக்கெட்டிலும் உங்கள் அன்பையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள், அதற்கு நன்றி என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

மேலும் காத்துவாக்குல 2 காதல் படம் மே 27 ஆம் தேதி நேற்று ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62வது படத்தை இயக்கயுள்ளார். அதற்கான வேலையில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதற்குள்ளாகவே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடக்கயுள்ளது. திருப்பதியில் நடக்க இருந்த இவர்களது திருமணம் திரைப்பிரபலங்களின் வருகைக்காக சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. மேலும் சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனக்கு பிடித்த காரை சொந்தமாக வாங்கியிருந்தார். இவ்வாறு தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கு பல நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது.

Next Story

- Advertisement -