வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரோகினிக்கு மாமியாரும் கணவரும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்.. முத்துவையும் மீனாவையும் பிரிக்க பிளான் பண்ணிய மச்சான்

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தன்னுடைய கணவரை அசிங்கப்படுத்தி காலில்விழ சொன்ன சிட்டி இடம் மீனா கொந்தளித்து பேசி வாய்க்கு வந்தபடி திட்டி விட்டார். இதனை கேட்ட சிட்டி இப்படியே இவர்களை ஒன்று சேர்த்து வைத்தால் நமக்கு தான் பிரச்சனையாகி விடும். அதனால் இவர்களை பிரித்து விட வேண்டும் என்று யோசிக்கிறார்.

ஆனால் அதற்கு மீனாவின் தம்பி மூலமாகத்தான் நாம் காரியத்தை சாதிக்க வேண்டும். இனி அதற்கான வழியை தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி முத்துவையும் மீனாவையும் பிரிக்க பிளான் பண்ணுகிறார். ஏற்கனவே மீனாவின் தம்பி முத்து மீது கொலவெறியில் இருக்கிறார். தன்னுடைய நண்பன் தான் பெருசு என்கிற நினைப்பில் முத்துவை மாமா என்று கூட நினைக்காமல் அசிங்கப்படுத்தி விட்டார்.

அந்த வகையில் சிட்டி என்ன சொன்னாலும் தற்போது அதை கண்மூடித்தனமாக கேட்டு செய்யும் அளவிற்கு முத்துவின் மச்சான் மாறிவிட்டான். அதனால் இனி மச்சான் மூலமாக முத்துவுக்கு ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட போகிறது. இதனை அடுத்து மனோஜ், ரோகினிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கனடாவிற்கு போகவேண்டும்.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

அதனால் எப்படியாவது உங்க அப்பாவிடம் சொல்லி எனக்கு பணத்தை ஏற்பாடு பண்ணி கொடு. இதைப்பற்றி ஏற்கனவே என்னுடைய அம்மா உன்னிடம் பேசிட்டாங்களா. அதனால் சீக்கிரமாக எனக்கு பணத்தை கொடுத்தால் நான் கனடாவிற்கு போய் விடுவேன் என்று ரோகினிடம் கெஞ்சுகிறார். அடுத்ததாக மனோஜை தேடி அவருடைய பார்க் நண்பர் வீட்டிற்கு வருகிறார்.

வந்ததும் கொடுக்க வேண்டிய 20 ஆயிரம் ரூபாய் கடனை கொடுத்துவிடு என்று கேட்கிறார். அந்த நேரத்தில் ரோகிணியும் வந்ததால் மொத்த கதையும் சொல்லி இருபது ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதையும் சொல்லி மிரட்டுகிறார். உடனே ரோகிணி எந்த வேலைக்கு போகாமல் இருந்தாலும் உன்னால எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

இப்பொழுது நீ வெட்டியாக கடன் வாங்கி செலவழித்த பணத்தையும் என் தலையில வந்து விழுது என்று புலம்புகிறார். உடனே மனோஜ் எப்படியாவது இந்த கடனை மட்டும் அடைத்து விடு. வீட்டிற்கு தெரிந்தால் என் மானமே போய்விடும் என்று பணம் கேட்டு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே ரோகினிடம் மாமியாரும் 14 லட்சம் ரூபாய் கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார். இதை எப்படியாவது சமாளித்தால் மட்டும்தான் ரோகிணி மேல் எந்தவித சந்தேகமும் வராது.

Also read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட ரோகிணி.. ஓவரா குதிக்கும் விஜயா,பிளாக்மெயில் பண்ணும் முத்து

- Advertisement -

Trending News