புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

Sirakadikkum Asai Serial Actress: சீரியலுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது நாடகத்தை இறக்கி வருகிறார்கள். ஆனாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு தான் முதலிடம் என்பதற்கு ஏற்ப அனைவரும் இந்த சேனலில் இருந்து வரும் நாடகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருப்பது சிறகடிக்கும் ஆசை சீரியல்தான். எதார்த்தமான கதையும், தத்ரூபமான நடிப்பும் இருப்பதால் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. அப்படிப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஒரு நாயகி வேறொரு சேனலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் இரண்டுக்குமே ஒரே நேரத்தில் டைம் செலவழிக்க முடியாததால் தற்போது ஒத்தையா ரெட்டையா போட்டு ஒரு சீரியலில் இருந்து விலகலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை முத்துவை பார்த்தாலே வெறுத்து ஒதுக்கும் ஸ்ருதி கேரக்டரில் நடித்து வரும் பீர்த்தா ரெட்டி. இவருக்கும் முத்துக்கும் தான் தொடர்ந்து சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ரோகினியை விட இவருக்கு தான் முக்கியமான கதாபாத்திரமும், நல்ல நடிப்பு திறமையும் பார்க்க முடிகிறது.

Also read: மனோஜ் மூலம் ரோகினிக்கு பெரிய ஆப்பை வைக்கும் விஜயா.. குதூகலத்தில் கொண்டாடும் முத்து

இதே மாதிரி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலிலும் விக்ரமின் தங்கையாக நடித்து வருகிறார். அந்த சீரியலிலும் இவருக்கான கதாபாத்திரம் தான் தற்போது அதிகரித்துக் கொண்டே போகிறது. காதலனை நம்பி மோசம் போன சூழ்நிலையில், வீட்டில் பார்த்த பையனை கல்யாணம் பண்ணி விடுகிறார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட இனியா இந்த பிரச்சினையில் இருந்து விக்ரம் தங்கையை காப்பாற்ற வேண்டும் என்று போராடி வருகிறார்.

இப்படி இந்த இரண்டு சீரியல்களிலுமே பீர்த்தா ரெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் சரியான நேரத்தை இரண்டு நாடகத்திற்குமே செலவழிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அதனால் இப்போதைக்கு ஒரு நாடகத்தில் இருந்து விலகலாம் என்று சன் டிவியில் வருகின்ற இனியா சீரியலுக்கு குட் பாய் சொல்லலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது.

Also read: முத்துவுடன் கூட்டணி போட்ட அண்ணன் தம்பி.. மீனா வடிக்கும் கண்ணீரில் ஆனந்தப்படும் விஜயா ரோகினி

- Advertisement -

Trending News