ஸ்விக்கியில் 8 வருடமாய் குவியும் ஒரே ஆர்டர் .. 2023ல் முதலிடத்தை பிடித்த உணவு எது தெரியுமா?

Swiggy: உணவு ஆர்டர் செய்யப்படும் ஸ்விகி, zomato போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு திருமணம் ஆகாதவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு சாப்பாடு என்ற விஷயம் ரொம்பவும் ஈசியாகிவிட்டது. அதிலும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் உணவு ஆர்டர் நிறுவனமாக ஸ்விக்கி இருக்கிறது.ஆண்டு இறுதியில் இந்த நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறது.

ஆண்டு இறுதியில் பிரபல நிறுவனங்கள் இந்த வருடம் முழுக்க அதிகம் தேடப்பட்ட விஷயம், தங்களிடம் அதிகம் வாங்கப்பட்ட பொருட்கள் என நிறைய பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்விகி நிறுவனம், இந்த 2023 ஆம் ஆண்டு முழுக்க தங்களுடைய நிறுவனத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்

இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் ஸ்விகியில் அதிக உணவு ஆர்டர் செய்யும் நகரங்களில் மும்பை முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது ஒரு நிமிடத்திற்கு 188 பீட்சாக்கள் ஆர்டர் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது. சென்னை, டெல்லி, பெங்களூருவில் தான் இந்த ஆர்டர்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

Also Read:வாழ்க்கையையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த 3 புத்தகங்கள்.. மிஸ் பண்ணாம படிச்சுடுங்க

துர்கா பூஜை அன்று அதிக அளவில் குலோப் ஜாமுன்கள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோன்று அன்னையர் தினத்தன்று சாக்லேட் கேக்குகள் அதிக ஆர்டர்கள் செய்யப்பட்டிருக்கின்றன. நவராத்திரி முழுக்க சைவ சாப்பாடுகள் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டாலும், அதில் மசால் தோசை தான் முதலிடத்தில் இருந்ததாக அந்த நிறுவனம் சொல்லியிருக்கிறது.

இப்படி ஒவ்வொரு கொண்டாட்டத்தின் போதும் பலவிதமான உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டாலும், வருடம் முழுக்க ஆர்டர் செய்யப்பட்டு முதலிடத்தில் இருப்பது பிரியாணி தான். இந்தியாவில் ஒரு வினாடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி மட்டும் நாலு லட்சத்து 30 ஆயிரம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வருடம் 2.49 மில்லியன் பெயர் ஸ்விகியில் புதிதாக உணவு ஆர்டர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அத்தனை பேருமே பிரியாணி தான் ஆர்டர் செய்திருக்கிறார்கள். ஐந்து பிரியாணி ஆர்டர் செய்யும் இடத்தில் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாகவும் அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது. கடந்த எட்டு வருடங்களாக பிரியாணி தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

Also Read:ஈவு இரக்கமில்லாமல் சோலி முடிக்கும் அம்பானி.. தலையில் அடித்துக் கொள்ளும் இணைய சேவைகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்