வாழ்க்கையையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த 3 புத்தகங்கள்.. மிஸ் பண்ணாம படிச்சுடுங்க

3 Powerful Books: ஒரு புத்தகத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் ஒரு வகை. புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாதவர்கள் கூட இந்த மூன்று புத்தகங்களை கண்டிப்பாக வாழ்நாள் முடிவதற்குள் படித்து விட வேண்டும்.

இந்த மூன்று புத்தகங்கள் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கும்போது உங்களை வேறொரு மனிதனாக உணர்வீர்கள். ஒரு தனிமனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போடும் சக்தி வாய்ந்ததாக இந்த புத்தகம் இருப்பதாக வாசகர்களே தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த மூன்று புத்தகங்களை பற்றி பார்க்கலாம்.

தி சைக்காலஜி ஆஃப் மணி: மோர்கன் ஹவுஸ் என்பவரால் எழுதப்பட்டது தான் தி சைக்காலஜி ஆஃப் மணி. இந்த புத்தகத்தில் 19 சிறுகதைகள் இருக்கின்றன. பணத்தின் மீதான மக்களின் புரிதலை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது. பணம் என்பது தனிப்பட்ட ஈகோவிற்காகவோ, சந்தைப்படுத்துவதற்காகவோ, பெருமையை காட்டுவதற்காகவோ பயன்படுத்தும் பொருள் அல்ல என்பதை விளக்குகிறது. இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு பணத்தை எப்படி செலவிட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படும்.

தி 48 லாஸ் ஆஃப் பவர்: ராபர்ட் க்ரீன் என்பவரால் எழுதப்பட்ட நூல் தான் தி 48 லாஸ் ஆஃப் பவர். உங்களுக்கு எதிரே உள்ள நபரை எப்படி கையாளுவது என்பதை தான் இந்த புத்தகம் விளக்குகிறது. ஒரு கூட்டத்தில் உங்களை எப்படி ஒரு முக்கியமானவராக காட்டிக் கொள்வது, எதிரியை கூட எப்படி வசீகரிப்பது, ஒரு சக்தி வாய்ந்த நபராக மாறுவது என்பதை பற்றி இந்த புத்தகம் பேசுகிறது.

ஹவ் டூ வின் பிரண்ட்ஸ் அண்ட் இன்பிளுயன்ஸ் பீப்பிள்: டேல் கார்னிக் என்பவரால் எழுதப்பட்ட நூல் தான் இது . இன்றைய போட்டி உலகில் நம்முடைய ஆளுமை சக்தியால் எப்படி நண்பர்களை வெல்வது என்பதை தான் இந்த புத்தகம் விளக்குகிறது. நேர்மரையான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, எதிலும் குறை பார்க்காமல் இருப்பது எப்படி என்பதை இந்த புத்தகம் 214 பக்கங்களில் விளக்கி சொல்லுகிறது.

பணத்தை எப்படி கையாள்வது, சக்தி வாய்ந்த மனிதராக எப்படி மாறுவது, நண்பர்களிடையே ஆளுமையோடு எப்படி இருப்பது என்பதை கற்றுக் கொண்டாலே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம். இந்த மூன்று விஷயங்களை கைக்குள் அடங்கும் ஒரு புத்தகம் கத்துக் கொடுக்கிறது என்றால், அதை தவறாமல் படித்து விட வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்