ஈவு இரக்கமில்லாமல் சோலி முடிக்கும் அம்பானி.. தலையில் அடித்துக் கொள்ளும் இணைய சேவைகள்

Offers on Jio AirFiber: கலகலப்பு, சந்தானம் காமெடியில் பருத்தி மூட்டைய பேசாம குடோன்லயே வச்சிருக்கலாமே என்று கேட்பதற்கு என்னப்பா செய்றது அவங்களுக்கு கொடுக்கிற சம்பளத்துக்கு வேலை வாங்கணுமே என்று கூறுவது போல் பொழுதுபோக்கு பிரியர்கள் அனைவரும் இன்று Hotstar, Netflix மற்றும் Amazon Prime என்று தனித்தனியாக சந்தா கட்டி, அதை கட்டியதற்காகவே அதன் சேவைகளை  உபயோகிக்கின்றனர்.

இவை அனைத்தையும் ஒரே பிளான்ல கொடுத்தா என்ன? என்று  ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், “நான் கொடுக்கிறேன் பாரு பிளான்னு!” என்று கெத்தா அதிரடி காட்டியுள்ளது ஜியோ நிறுவனம்.

தொலைத்தொடர்பு துறை சேவையில் தவிர்க்க முடியாத ஜாம்பவானாக விளங்கும் ஜியோ, அதிரடியான அறிவிப்பை  வெளியிட்டதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் அந்த அறிவிப்பின் சேவைகள் பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பின் பயனானது வலைதள பிரியர்கள் அனைவரும் one way  இல் பயணிப்பது( People use jio only)என்பதை அறிய முடிகிறது.

Also Read:மிக குறைந்த விலையில் Jio 5ஜி மொபைல்.. அம்பானியின் அதிரடி ஆஃபரால் ஆடிப்போன முன்னணி நிறுவனங்கள்

ஜியோ ஏர் பைபர்(Jio AirFiber)  என்ற பெயரில் 5G தொழில் நுட்ப சேவையில் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பை வழங்குவதுடன் அனைத்து விதமான ஓ டி டி சேவைகளையும் இலவசமாக வழங்க முன் வந்துள்ளது. அதற்கென பல கவர்ச்சியான திட்டங்களையும் Jio  அறிவித்துள்ளது. 1199 இல் தொடங்கி 3999  ரூபாய் வரை முப்பது நாட்களுக்கு1Gbps speed இல் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் மற்றும் 550 டிஜிட்டல் சேனல்ஸ் மற்றும் பல  ஆச்சரியமூட்டும் சேவையை வழங்க உள்ளது

ரிலையன்ஸின் Jio AirFiber சேவை கடந்த செப்டம்பரில் வெளியாகி வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 115 நகரங்களில் விரிவு படுத்தபட்டுள்ளது.  தமிழ்நாட்டின் சென்னை, , காஞ்சிபுரம், கோயம்புத்ரிலையன்தூர், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை போன்ற முக்கிய நகரங்களில்  இது தனது சேவையை வழங்க உள்ளது. இது  மக்களுக்கு வழங்கும் ஃப்ரீயா அல்லது பொறியா என்று தெரியவில்லை.

Also Read:அதிரடியாக ஏறிப்போச்சு கட்டணம்.. ஜியோ.. வோடஃபோன்.. ஏர்டெல்.. இதில் இப்ப இது பெஸ்ட் சாய்ஸ்?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்