புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

தியேட்டரில் பதற வைத்த 8 பேய் படங்கள்.. உச்சகட்ட பயத்தை காட்டிய மிஸ்கின்

தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வப்போது வெளியாகும் இந்த திகில் படங்கள் ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே வரச் செய்யும். அந்த அளவிற்கு ரசிகர்களை பயமுறுத்தும் அளவிற்கு கொடூரமான பேய் படங்களும் வெளியாகி உள்ளது. அவ்வாறு ரசிகர்களை பயத்தில் ஆழ்த்திய 8 படங்களை பார்க்கலாம்.

யாவரும் நலம் : விக்ரம் கே குமார் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் யாவரும் நலம். ஒரு புதிய அபார்ட்மெண்டுக்கு குடியேறும் மாதவனின் குடும்பம் பல அமானுஷ்ய விஷயங்களை பார்க்கிறது. மேலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட 13 பேர் கொண்ட குடும்பத்தில் பழைய வீட்டில் தான் இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது என்பதை மாதவன் அறிய முயற்சிக்கிறார்.

டிமான்டி காலனி : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இப்படத்தில் நான்கு இளைஞர்கள் குடித்துவிட்டு பாழடைந்த பங்களாவுக்குள் செல்கின்றனர். அவர்கள் அந்த பேய் வீட்டில் இருந்து வந்தும் அந்த அமானுஷ்யங்கள் இவர்களை சுற்றி திரிகிறது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பீட்சா : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான திரைப்படம் பீட்சா. இப்படத்தில் மைக்கேல் என்ற டோர் டெலிவரி வேலை பார்க்கும் பையன் தனது முதலாளியிடம் வைரங்களை அபகரிக்க ஒரு கொடூரமான பேய் கதையை கூறி ஏமாற்றுகிறான். இப்படம் ரசிகர்களை கவர்ந்த பாராட்டுக்களை பெற்றது.

லிப்ட் : கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் வினித் வரபிரசாந்த் இயக்கத்தில் பிக் பாஸ் கவின் மற்றும் அமிர்தா ஐயர் நடிப்பில் வெளியான திரைப்படம் லிப்ட். இப்படம் முழுக்க சஸ்பென்ஸ் நிறைத்திருந்தது. இரவு நேரத்தில் லிஃப்டில் சிக்கிக்கொள்ளும் கவின், அமிர்தா இருவரும் அமானுஷ்யம் செயல்களால் கஷ்டப்படுகின்றனர்.

அவள் : மிளிண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் கடந்த 2017 இல் வெளிவந்த திரைப்படம் அவள். இப்படத்தில் திருமணமான புதுமண ஜோடி கள் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் புதிய வீட்டுக்குக் குடி போகின்றனர். ஆனால் பக்கத்து வீட்டில் உள்ள பேய் நடமாட்டத்தால் இவர்கள் நிம்மதியை கிடைக்கின்றனர்.

பிசாசு : மிஸ்கின் இயக்கத்தில் பாலா தயாரிப்பில் வெளியான திரைப்படம் பிசாசு. இப்படத்தில் இறந்த பெண்ணின் ஆவி ஒரு இளைஞனை பயமுறுத்துகிறது. அதன்பிறகு அது தன்னை காதலித்த பெண்ணின் ஆவி தெரிந்த பின் அந்த இளைஞன் எடுக்கும் முடிவு தான் பிசாசு படத்தின் கதை.

மாயா : அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மாயா. இப்படத்தில் நயன்தாரா வளரும் நடிகை அப்சராவாகவும், மாயா பேயாகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மாயா படம் முழுவதும் சஸ்பென்ஸ் உடன் நகர்கிறது.

ஈரம் : ஆதி, நந்தா, சிந்து மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஈரம். இப்படத்தில் கணவன் தன் மனைவியின் மீது ஏற்படும் சந்தேகத்தால் அவளைக் கொன்றுவிடுகிறான். அதன் பின்பு ஆவியான மனைவி, தன் கணவன் தன்னை கொல்ல தூண்டுதலாக இருந்த மற்றவர்களை தண்ணீர் மூலம் கொலை செய்து வருவதும் இப்படத்தின் கதை.

- Advertisement -spot_img

Trending News