பாலிவுட்டிலும் வெற்றிகண்ட 5 தமிழ் இயக்குனர்கள்.. அங்கேயும் அசத்திய ஆண்டவர்

தற்போது உள்ள நடிகர், நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் சினிமா பல அற்புதமான படைப்புகளை கொடுத்த சில இயக்குனர்கள் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளனர். அவ்வாறு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த 5 இயக்குனர்கள் பாலிவுட்டில் இயக்கிய திரைப்படங்களைப் பார்க்கலாம்.

மணிரத்னம் : தமிழ் சினிமாவில் வித்தியாசமான காதல் படைப்புகள் மூலம் வெற்றி கண்டவர் இயக்குனர் மணிரத்னம். ரோஜா, மௌனராகம், நாயகன், பம்பாய் போன்ற பல வெற்றிப் படங்களை தமிழில் இயக்கியுள்ளார். மணிரத்னம் பாலிவுட்டில் தில் சே, யுவா, சாதியா, குரு, ராவணன், சரி ஜானு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ஷங்கர் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெரும். இவர் இயக்கத்தில் வெளியான இந்தியன், முதல்வன், சிவாஜி, எந்திரன், நண்பன் போன்ற பல படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. 2001இல் முதல்வன் படத்தின் ரீமேக்கை நாயக் என்ற பெயரில் பாலிவுட்டில் இயக்கியிருந்தார் ஷங்கர்.

கௌதம் வாசுதேவ் மேனன் : மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். இவருடைய முதல் படமான மின்னலே படத்தை இந்தியில் ரீமேக் செய்து ரெஹ்னா ஹை டெர்ரே தில் மே என்ற பெயரில் இயக்கி இருந்தார். சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஹிந்தியில் ஏக் தீவானா தா பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஏ ஆர் முருகதாஸ் : தமிழ் சினிமாவில் தீனா, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி போன்ற படங்களை இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ். சூர்யாவை வைத்து தமிழில் உருவான கஜினி படத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து இயக்கினார் ஏ ஆர் முருகதாஸ். அதன்பிறகு 2016இல் அகிரா என்ற இந்திப் படத்தையும் இயக்கியுள்ளார் முருகதாஸ்.

கமலஹாசன் : தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் போன்ற பல திறமைகள் கொண்டவர் உலகநாயகன் கமலஹாசன். இவருடைய நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படம் ஹிந்தியில் சாச்சி 420 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதேபோல் கமலின் ஹேராம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்