Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிஆர்பி-யில் தெறிக்கவிடும் முதல் 5 சீரியல்கள்.. சன் டிவியை தூக்கிவிடும் குணசேகரன்

தற்போது போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு சேனல்களிலும் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகுத்துவிட்டது. சீரியலை பார்க்காமல் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் அதனோடு இணைந்து விட்டார்கள். அதிலும் ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் தினமும் பார்த்து பிறகு தான் தூக்கமே வரும் என்று சொல்லும் அளவிற்கு சீரியலுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனாலேயே தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் அதிகமாக ஒளிபரப்பு செய்வது சீரியல்கள் மட்டும் தான்.

அத்துடன் தற்போது போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு சேனல்களிலும் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். எத்தனையோ சேனல்கள் வந்திருந்தாலும் நாடகத்தை பொருத்தவரை சன் டிவியை அடிச்சுக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் ஆழமாக பதித்து விட்டார்கள். பொதுவாகவே சீரியல்கள் என்றாலே வயதானவர்கள் மட்டும் தான் பார்ப்பார்கள் என்று காலம் இருந்தது போய் தற்போது அனைவரும் பார்க்கும்படியாக நாடகத்திற்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.

Also read: குடும்பத்தின் முன் கோபியை கலாய்க்கும் பழனிச்சாமி.. ஆவேசத்தின் உச்ச கட்டத்தில் ராதிகா

எதிர்நீச்சல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் தான் தற்போது வரை முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதிலும் 400 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடி அனைவரையும் பார்க்க வைத்திருக்கிறது. இதில் குணசேகரன் ஆணாதிக்கத்துடன் இருக்கும் திமிரை அடியோடு ஒழிக்கவே அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் போராடும் முயற்சி தான் இந்நாடகத்தின் மையக்கருத்து. இதுவரை இந்த நாடகத்துக்கிட்ட யாராலயும் வர முடியாது என்று சொல்லும் அளவிற்கு சன் டிவியின் டிஆர்பியை எகிற வைத்திருக்கிறது. அதிலும் குணசேகரன் தான் சன் டிவியின் டிஆர்பி ரேட்டை தூக்கிவிடும் அளவிற்கு இருக்கிறார்.

பாக்கியலட்சுமி: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் சராசரி குடும்பப் பெண்ணாக இருக்கும் பாக்கியலட்சுமி, கணவரை நம்பி மோசம் போனதால் அதிலிருந்து மீண்டு தைரியமாக போராடி அவரையும் அவருடைய குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த நாடகத்தின் முக்கிய நோக்கம். அடுத்ததாக இதில் என்னதான் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும் கோபியின் நடிப்பிற்காக பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானவர். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்து விஜய் டிவியின் டிஆர்பி அதிகரித்து இருக்கிறது.

Also read: குணசேகரனை ஏமாற்றும் ஜனனியின் புதிய திட்டம்.. கதிரின் அடாவடித்தனத்துக்கு சரியான பதிலடி

பாண்டியன் ஸ்டோர்ஸ்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய நோக்கமே அண்ணன் தம்பிகள் திருமணத்திற்கு பின்னும் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதுதான். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு இவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பால் ஒவ்வொருவரும் தனியாக போனாலும் மனதார ஒற்றுமையாக இருக்கிறார்கள். இந்த சீரியல் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

கயல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலை பார்க்கும் பொழுது இப்படி ஒரு பொண்ணு எல்லார் வீட்டிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் அளவிற்கு குடும்பத்திற்கு தூணாக இருந்து கட்டிக் காப்பாற்றி வருகிறார். இதற்கிடையில் இவருக்கு சொந்தங்களிடமிருந்து வரும் பிரச்சனைகளை சமாளித்து குடும்பத்தை தலைக்குனிய விடாமல் பார்த்துக் கொள்கிறார். தற்போது இந்த சீரியல், ரேட்டிங் அடிப்படையில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

சுந்தரி: சன் டிவி ஒளிபரப்பாகி வருகின்ற சுந்தரி சீரியல் டிஆர்பி யில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதில் சுந்தரி கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசைக்கு நடுவில் அவருக்கு ஏற்பட்ட திடீர் திருமணத்தால் அவருடைய கலெக்டர் கனவை எப்படி நிறைவேற்றுகிறார். இதற்கிடையில் இவர் கல்யாணம் செய்த கணவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு இவரை தனியாக தவிக்க விடுகிறார். இதற்கு மத்தியில் இவர் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி எப்படி கலெக்டர் ஆகிறார் என்பதை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது.

Also read: கொஞ்சநஞ்ச பேச்சா பேசினீங்க ஜீவா.. இப்படி மாமனாரிடம் மாட்டி தவிக்கும் பரிதாபம்

Continue Reading
To Top