நாளுக்கு நாள் யூடியூப், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களுடன் பெண்கள் எல்லை மீறி செல்வதும் பின்னாளில் அவர்களை அதை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்க வைப்பதும் வாடிக்கையாகி கொண்டே வருகின்றன.
அந்த வகையில் டிக் டாக் செயலி இருந்த போது பன் பக்கெட் என்ற பெயரில் பார்கவ் என்ற தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் தொடர்ந்து நகைச்சுவையான வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
அதிலும் ஓமைகாட், ஓமைகாட் என்ற இவர்களது யதார்த்தமான நகைச்சுவை வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களை குவித்தது. இதன் மூலமே பார்வை மிகப்பெரிய பெயரையும் புகழையும் அடைந்தார்.
அதைப் பயன்படுத்திய பெண்களுடன் எல்லை மீறி வந்தது தெரியவந்துள்ளது. 14 வயது பெண்ணை தன்னுடைய பிரபலத்தை பயன்படுத்தி அவருடன் நெருக்கமாக பழகி அவருடைய பலான புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார்.
முதலில் அந்த பெண்ணை தனியாக அழைத்துச் செல்ல முடிவெடுத்த பார்கவ் அது பற்றி அவருடன் பேசியுள்ளார். ஆனால் அந்த பெண்மணி இவருடைய ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவருடைய பலான புகைப்படங்களை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் வேறு வழியின்றி பயந்துபோய் அவருடன் பழகியதால் தற்போது அந்த பெண்மணி 4 மாதம் கர்ப்பமாக உள்ளாராம். இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த காவல்துறையினர் உடனடியாக பார்கவ் பா**யல் வன்கொடுமை தண்டனை மற்றும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் போன்ற சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளார். இவர் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் இதே போன்ற வேலைகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.
