Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓவர் அலப்பறை கொடுத்த வாரிசு டீம்.. சைலண்டாக அடித்து நொறுக்கிய துணிவு
தற்போது துணிவு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்து வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருந்த சோசியல் மீடியா இன்று காலையிலிருந்தே ரணகளமாகி கொண்டிருக்கிறது. ஏனென்றால் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் இன்று ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளது. அதில் வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு தான் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் பலரையும் மிரட்டிய நிலையில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படமும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது. அதேபோன்று அஜித்தின் நடிப்பும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அதனாலேயே இப்போது துணிவு திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் அதற்கு நேர் மாறாக வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் படம் மெகா சீரியல் போன்று இருக்கிறது என வெளிவரும் கமெண்டுகளும் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இதை விஜய் ரசிகர்களே கூறுவது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது இந்த இரண்டு படங்களை பார்த்த அனைவரும் வாரிசு சொதப்பிவிட்டதாக வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் படம் வெளி வருவதற்கு முன்பாக வாரிசு படம் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கிளம்பிய பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Also read: களை கட்டும் பொங்கல் ரிலீஸ்.. அசர வைக்கும் துணிவு முதல் நாள் வசூல்
மேலும் வாரிசு படத்தின் ப்ரீ பிசினஸ், ஓவர்சீஸ் வியாபாரம் என அனைத்தும் துணிவை விட முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. அதற்கேற்றார் போல் பட குழுவும் ஓவர் பில்டப் கொடுத்து வந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அஜித்தை விட விஜய் தான் மாஸ் ஹீரோ என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி ஓவர் அலப்பறை கொடுத்து வந்த வாரிசு தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அந்த வகையில் துணிவு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்து வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் தற்போது திரையுலகின் பரப்பரப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது அந்த வகையில் வாரிசை பின்னுக்குத் தள்ளி துணிவு சைலண்டாக முன்னேறியுள்ளது.
Also read: கணக்குப் பார்க்காமல் வாரி கொடுத்த தில் ராஜு.. வாரிசு பட நடிகர்களின் மொத்த சம்பள விவரம்
