புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

7 பேருடன் ரெடியான இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்.. வாயாடி தூக்கி வீச போகும் பிக் பாஸ் வீடு

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் ஷோவானா பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளதால், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் தினம் தோறும் ஒளிபரப்பாகிறது. இதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் வெளியாகி உள்ளது.

இதில் இதுவரை நாமினேஷன் லிஸ்டில் ஒரு முறை கூட வராத சிவில் இடம் பெற்று இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இவருடன் விக்ரமன், அசீம், ரட்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, கதிரவன், மைனா உள்ளிட்ட 7 பேர் ஓப்பன் நாமினேஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

Also Read: பிக் பாஸில் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் 3 போட்டியாளர்கள்.. கேமரா இருப்பது தெரியாமலே உளறிய கேவலம்

ஒவ்வொரு போட்டியாளர்களும் இந்த வீட்டில் அடுத்த வாரம் இருக்கக் கூடாத இரண்டு நபர்களை தேர்வு செய்து அவர்களது முகத்தில் சிவப்பு வண்ணத்தில் இன்ட் மார்க் செய்து வெளிப்படையாக ஓப்பன் நாமினேட் செய்ய வேண்டும்.

இதில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 10 பேரும் மாறி மாறி நாமினேட் செய்ததில், 7 பேர் கடைசியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் நிச்சயம் மைனா நந்தினி அல்லது கதிரவன் இருவருள் ஒருவர்தான் வெளியேறப் போகிறார்கள்.

Also Read: விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

ஏனென்றால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து இப்போது வரை கதிரவன் எந்தவித சுவாரசியமான கன்டென்ட்டும் கொடுக்காத நபராகவே இன்று வரை இருக்கிறார். அதேபோல மைனா நந்தினியும் அளவுக்கு அதிகமாக தேவையில்லாத பிரச்சனையை பேசி வாயாடி கொண்டிருக்கிறார்.

அத்துடன் மைனா நந்தினி மணிகண்டன் உடன் சேர்ந்து கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஒரு தலைப்பட்சமாக சில முடிவுகளை எடுத்து ரசிகர்களை எரிச்சல் அடைய செய்கிறார். ஆகையால் இந்த வார இறுதியில் மக்கள் அளிக்கும் ஓட்டுக்களின் அடிப்படையில் பெரும்பாலும் மைனா நந்தினி அல்லது கதிரவன் இருவருள் ஒருவர்தான் வெளியேறப் போகிறார்கள்.

Also Read: டைட்டில் வின்னர் இவர்தான்.. ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என விமர்சித்த சீசன் 6 போட்டியாளர்

- Advertisement -

Trending News