சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து, அனைவரும் எதிர்பார்த்த சூர்யா-பாலா கூட்டணி தற்பொழுது இணைந்து சூர்யாவின் 41வது படத்தில் இணைந்து படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள்.
நல்ல கதையம்சத்துடன் கூடிய படத்தில் சூர்யாவும் பாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் இந்தப் படத்தை தொடங்கினார்கள். சூர்யா ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்தப்படத்தை ஜிவி பிரகாஷ் இசை அமைத்து, சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ரெட்டி மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் கதை, மீனவர் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கடலோரங்களில் மட்டுமே அனைத்து கிராமங்களிலும் படப்பிடிப்பை நடந்து கொண்டிருந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரி அதைத்தொடர்ந்து மதுரை போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டு, அதன்பிறகு கோவா செல்ல படக்குழு திட்டமிட்டு இருந்தது
இதில் சூர்யா கதாபாத்திரமும் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. இன்னிலையில் இந்த படப்பிடிப்புத் தளத்தில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு, இன்று இந்தப் படம் மறுபடியும் தொடங்குமா என்ற கேள்விக்கு ஆளாகி இருக்கிறது.
அந்த அளவிற்கு பிரச்சனை பெரியதாக மாறி இருக்கிறது. இது ரசிகர்களிடையே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் ஒன்று, பாலா எப்போதும் போல் அவர் இருக்கிறார். சூர்யா முதல் படத்தில் பாலாவுடன் இருந்த சூர்யா இப்பொழுது இல்லை.
அவர் வளர்ந்து விட்டார். அதனால் பிரச்சினை முற்றுகிறது. எப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரியவில்லை. சூர்யா-பாலா இருவருக்கும் இடையே இருக்கும் சலசலப்பை ஒரு சிலர் சரி செய்யவும் முயற்சி செய்கின்றனர்.