சீரியல்களின் நம்பர் ஒன் சேனல் சன் டிவி நிறுவனத்தின் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றை மற்றொரு சேனல் எப்படி ஒளிபரப்புகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதுவே டிஆர்பி-யில் பட்டையை கிளப்பிய சீரியல் அது.
சினிமாவைப் போலவே சீரியல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தாய்மார்களின் வரவேற்கும் அமோகமாக இருந்து வருகிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மிகவும் போர் அடிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இதன் காரணமாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய சீரியல்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் சரி ரியாலிட்டி ஷோக்களும் சரி ரசிகர்களின் பேவரைட் தான். இளம் ரசிகர்கள் பலரும் விஜய் டிவி சீரியல்களை பார்த்து வருகின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதனால் சன் டிவி நிறுவனம் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் சீரியல்களை தூசி தட்டி வருகிறது. இதற்கிடையில் தன்னுடைய நிறுவனத்தின் மற்றொரு அங்கமான கலைஞர் சேனலுக்கும் சன் டிவி உதவி செய்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திருமதி செல்வம் என்ற சீரியலை தூக்கி கலைஞர் டிவிக்கு கொடுத்து விட்டதாம். ஒரு காலத்தில் நாளைய இயக்குனர் போன்ற தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது கலைஞர் டிவி சமீபகாலமாக தடம் தெரியாமல் போனதால் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் கலைஞர் டிவியை புத்துணர்ச்சி பெற வைக்கிறதாம் சன் டிவி.
