திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

இவங்க தான் சரிப்பட்டு வருவாங்கன்னு ஒதுக்கப்பட்ட 6 கதாபாத்திரங்கள்.. நாட்டாமை-னா அது விஜயகுமார் தான்

Fixed 6 Characters: பொதுவாக படங்களில் ஹீரோக்கள் மற்றும் நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டாலும் அதில் இவர்களுக்கு நண்பராகவும், சில முக்கிய கேரக்டர்கள் பேசும்படியாக இருந்தால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் சில கதாபாத்திரங்கள் இந்த கேரக்டருக்கு தான் சரிப்பட்டு வருவார்கள் என்று அப்படியே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி ஒதுக்கப்பட்ட ஆறு கதாபாத்திரங்களின் கேரக்டர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

அதில் நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி முக்கால்வாசி நடித்த கதாபாத்திரம் என்னவென்றால் மேரேஜ் புரோக்கர். அதாவது படங்களில் நடிகர் நடிகைகளுக்கு வீட்டில் பெண் பார்க்கும் போது புரோக்கரை கூப்பிட்டு நல்ல வரன் இருந்தா சொல்லுங்கள் என்று வரும்படியான கதாபாத்திரம் தான் வெண்ணிறாடை மூர்த்தியின் மேரேஜ் ப்ரோக்கர்.

Also read: 4 படங்கள் ரிலீசாகியும் பிரயோஜனம் இல்லை.. வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஆர் ஜே பாலாஜி வாங்கிய மொக்கை

அடுத்தபடியாக நடிகரின் நண்பராக எத்தனையோ பேர் நடித்திருந்தாலும் அமெரிக்க மாப்பிள்ளை என்றதும் ஞாபகத்துக்கு வருவது கண்ட நாள் முதல் படத்தில் நடித்த கார்த்திக். இவர் பிரசன்னாவின் நண்பராக வந்து லைலாவை பொண்ணு பார்க்க வருவார். அடுத்து சுவாரஸ்யமான ஒரு கேரக்டர் என்றால் டி எம் கார்த்திக்.

இவர் நண்பன் படத்தில் ஹீரோயின் இலியானாவிற்கு மாப்பிள்ளை ஆக பேக்கு போல் நடித்திருப்பார். இவரை பார்க்கும்போது உண்மையாகவே இவர் பேக்குதானோ என்று நம்பும் படியாக கேரக்டருக்கு தகுந்தார் போல் நடித்திருப்பார். அடுத்ததாக 80, 90களில் வெளிவந்த படங்களில் குடிகாரன் போல் குடித்துவிட்டு ஆட்டம் போடும் கேரக்டரில் இவரை தவிர யாரு நடித்தாலும் பொருத்தமாக இருக்காது என்று சொல்லும் படியாக மணிவண்ணன் கேரக்டர் எதார்த்தமாக இருக்கும்.

Also read: ஆர் ஜே பாலாஜியின் கதைக்கு ஓகே சொன்ன மாஸ் ஹீரோ.. லோகேஷ்க்கு போட்டியாக வந்துருவாரு போல

மேலும் ஹீரோவின் பிரண்ட் ஆகவும், அதே நேரத்தில் ஹீரோவை கலாய்த்து தோள் கொடுக்கும் தோழனாகவும் இருக்கும் கேரக்டரில் அதிகமாக கவர்ந்தது நடிகர் ஆர் ஜே பாலாஜி. அந்த வகையில் நானும் ரவுடி தான், தேவி, வேலைக்காரன் போன்ற படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்திருப்பார்.

அடுத்ததாக நாட்டாமை கதாபாத்திரம் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகத்துக்கு வருவது நடிகர் விஜயகுமார் தான். இந்த நாட்டாமை கேரக்டருக்கு கச்சிதமாகவும், தத்துரூபமாகவும் நடித்து தற்போது வரை இந்த இடத்தை யாராலயும் ஈடு கட்ட முடியாது என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறார். இவர் தான் இந்த கேரக்டருக்கு என்று ஒதுக்கப்பட்டு விட்டது.

Also read: இயக்குனர்கள் வில்லனாக மாஸ் காட்டிய 5 படங்கள்.. அரசியல்வாதியாக மிரட்டிய மணிவண்ணன் 

- Advertisement -spot_img

Trending News