புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இயக்குனர்கள் வில்லனாக மாஸ் காட்டிய 5 படங்கள்.. அரசியல்வாதியாக மிரட்டிய மணிவண்ணன் 

தமிழ் சினிமாவில் பல அற்புதமான படைப்புகளை தங்களின் இயக்கத்தின் மூலம் கொடுக்கக் கூடியவர்கள் தான் இயக்குனர்கள்.  இதனைத் தொடர்ந்து இவர்கள் இயக்குனர்களாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் மாஸ் காட்டி உள்ளனர். அதிலும் வில்லன் கதாபாத்திரங்களில் தங்களுக்கே உண்டான பாணியில் நடித்து  அனைவரையும் மிரள விட்டிருக்கின்றனர். அப்படியாக இயக்குனர்கள் வில்லனாக அவதாரம் எடுத்த 5 படங்களை இங்கு காணலாம்.

ஆர் சுந்தரராஜன்: இயக்குனர் லியாகத் அலிகான் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எங்க முதலாளி. இதில் விஜயகாந்த் உடன் கஸ்தூரி, ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ஆர் சுந்தரராஜன் கூட்டு குடும்பத்திற்குள் சகோதரர்களுக்கு இடையே, பகையினை வளர்த்து பல சூழ்ச்சி வேலைகளை செய்யும் வில்லனாக நடித்த அசத்தி இருப்பார்.

Also Read: மைக் மோகனை வைத்து ஆர் சுந்தர்ராஜன் ஹிட் அடித்த 5 படங்கள்.. வெள்ளி விழா கண்ட பயணங்கள் முடிவதில்லை

கேஎஸ் ரவிக்குமார்: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சேரன் பாண்டியன். இதில் விஜயகுமார், சரத்குமார், நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சகோதரர்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து இக்கதையானது அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார்  சகோதரர்களுக்குள் இருக்கும் பகையை மேலும் தூண்டிவிடும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பி வாசு: எம் மகாராஜன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வல்லரசு. இதில் விஜயகாந்த் உடன் தேவயானி, கரண், பி வாசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் பி வாசு விஜயகாந்த்க்கு எதிராக கொடூரமனம் படைத்த வில்லன் கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பி இருப்பார்.

Also Read: ரஜினி நடிப்பில் எடுக்க முடியாமல் போன வரலாற்று கதை.. பிரபல ஹீரோவுக்கு தூது விட்ட KS ரவிக்குமார்

நாசர்: ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராஜகுமாரன். இதில் பிரபு, மீனா, நதியா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் நாசர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஹீரோவிடம் பெருத்த அவமானத்தை சந்தித்து இருப்பார். இதன் பகையை மனதில் வைத்துக் கொண்டு பிரபுவை பழிவாங்கும் நோக்கத்தில் பல்வேறு  வில்லத்தனங்களில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மணிவண்ணன்: குரு தனபால் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாய்மாமன். இதில் சத்யராஜ் உடன் மீனா ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் கவுண்டமணி, விஜயகுமார், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் மணிவண்ணன் அரசியல்வாதியாக சத்யராஜுக்கு எதிராக பல சதி வேலைகளை செய்யும் வில்லனாக மாஸ் காட்டி இருப்பார்.

Also Read: மணிவண்ணன் இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 6 படங்கள்.

- Advertisement -

Trending News