ஆர் ஜே பாலாஜியின் கதைக்கு ஓகே சொன்ன மாஸ் ஹீரோ.. லோகேஷ்க்கு போட்டியாக வந்துருவாரு போல

ஆர் ஜே பாலாஜி சினிமா துறையில் ஒரு காமெடியனாக நுழைந்து தற்பொழுது நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் .இவரது படங்களில் நகைச்சுவை கலந்ததோடு மட்டுமில்லாமல் நிறைய கருத்துக்களையும் யோசிக்கும் வகையில் கதைகளத்தை கொண்டு வருபவர். இவரின் நடிப்பிற்கு ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

அதோடு இவரது கருத்துக்களை எந்தவித பயமும் இன்றி மேடைகளில் பேசுபவர். இவர் நடிகராக நடித்த படங்கள் எல்லாமே இவருக்கு ஒரு பெரிய வெற்றியை மட்டும் தான் கொடுத்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக வந்த வீட்ல விசேஷம் என்ற திரைப்படம் இவருக்கு அதிகமான பாராட்டுகளையும்,வணிக ரீதியாகவும் வெற்றியடைய செய்தது.

Also read: பாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு லுக்கை மாற்றிய ஆர் ஜே பாலாஜி.. ஒரு பக்கம் தில்லுமுல்லு ரஜினி மாதிரி இருக்காரே

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இவர் மாஸ் ஹீரோவுக்கு கதை சொன்னதாகவும் அந்த கதையைக் கேட்ட அவர் உடனே ஓகே சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார். அந்த பெரிய மாஸ் ஹீரோ இளைய தளபதி விஜய் தான். இதை ஆர்.ஜே பாலாஜி, விஜய்யிடம் நான் இதை பிரஸ்மீட்டில் சொல்லலாமா என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு விஜய்யும் கண்டிப்பாக இதை நீங்க தெரிவிக்கலாம் என்று சொல்லிஇருக்கிறார். ஆனால் முதலில் இந்த படத்தில் ஹீரோவாக இவர்தான் நடிக்கப் போவதாக முடிவு செய்து கதையை எழுதி இருக்கிறார். பின்பு இந்தக் கதைக்கு விஜய் மட்டும் தான் செட் ஆகும் என்று நினைத்து அவரிடம் போய் கதை சொல்லி இருக்கிறார்.

Also read: பிரகாஷ்ராஜ் லெவலுக்கு பார்வையாலேயே மிரட்டிய வில்லன்.. கமலுக்கே டஃப் கொடுத்தவருக்கு வந்த கெட்ட நேரம்

ஆர்.ஜே பாலாஜியின் படங்கள் பொதுவாக அரசியல் சம்பந்தப்பட்டதாகவும் அவர் யாரையாவது தாக்கும் வகையில் தான் படத்தில் நடிப்பார்.அந்த வகையில் சமீப காலமாக விஜய்யும் தனது படங்களில் அரசியலைக் கொண்டு வரும் வகையில் தான் நடித்து வருகிறார். இப்பொழுது இவர்கள் இருவரும் இணையும் கூட்டணி கண்டிப்பாக அரசியல் சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கதையை எழுதி முடிப்பதற்கு கொஞ்சம் டைம் கேட்டு இருக்கிறார். விஜய்யிடம் கதை சொல்வதற்கு மட்டுமே இரண்டு மாதங்கள் தன்னை தயார் செய்துள்ளதாக தெரிவித்தார். அப்படி இருக்கையில் இந்த படத்திற்கான பட வேலைகள் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: இந்திய அளவில் முதல் இடத்தில ட்ரெண்டிங் ஆன Me Vijay ! ட்விட்டரை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் – ஏன் தெரியுமா ?

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -