கோடிக்கணக்கில் புரளும் காசு.. எங்க போடுவது என தெரியாமல் சினிமாவில் களமிறங்கிய 5 நடிகர்களின் நிலை!

முன்பெல்லாம் நடிப்பை பற்றி நன்கு தெரிந்தவர்கள், மேடை நாடக கலைஞர்கள் தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு நடிக்க வந்தவர்கள் கூட டான்ஸ், சண்டை பயிற்சி ஆகியவற்றை நன்கு கற்று கொண்டு சினிமாவில் என்ட்ரி கொடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் ஹீரோவாக நடிக்கலாம் என்ற நிலைமை இருக்கிறது. அதாவது கையில் காசு இருந்தால் போதும் அவர்கள் உடனே சினிமா பக்கம் தங்கள் பார்வையை செலுத்த ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வகையில் கோடிக்கணக்கில் காசு வைத்துக்கொண்டு சினிமாவில் களமிறங்கிய ஐந்து நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

பவர் ஸ்டார் சீனிவாசன்: தனக்குத்தானே இப்படி ஒரு பட்டத்தை கொடுத்துக் கொண்ட இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கையில் ஏராளமான காசு வைத்திருக்கும் இவர் அதை என்ன செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளராகவும் மாறினார்.

அந்த வகையில் லத்திகா என்ற திரைப்படத்தை இவர் தயாரித்து, ஹீரோவாகவும் நடித்தார். அதற்காக சொந்த செலவில் ஏகப்பட்ட விளம்பரங்களையும் செய்தார். ஆனால் அந்த படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. இதனால் அவர் ஏகப்பட்ட கடன் நெருக்கடிக்கும் ஆளானார். அதன் பிறகு சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் கடைசியாக பேய் மாமா என்ற திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜேகே ரித்தீஷ்: மிகப்பெரும் பணக்காரரான இவர் கானல் நீர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அதை தொடர்ந்து நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் அரசியலிலும் வெகு பிரபலம்.

சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இவர் அதன் பிறகு சரிவர வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இவர் தன்னுடைய 46வது வயதில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆர் கே சுரேஷ்: தம்பிக்கோட்டை, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் தாரைதப்பட்டை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் இவர் திரைப்படங்களை வாங்கி வெளியிடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் காசுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இவர் சினிமாவை நம்பி தன் பணத்தை முதலீடு செய்து வருகிறார்.

ஜீவன்: மதுரையைச் சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான இவர் தமிழில் யுனிவர்சிட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து காக்க காக்க திரைப்படத்தில் பாண்டியா என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து அதிக பிரபலம் அடைந்தார்.

மேலும் நான் அவன் இல்லை, திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஜீவன் கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் சினிமாவில் நடிக்காமல் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

சரவணன் அருள் அண்ணாச்சி: மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் முதலாளியாக இருக்கும் இவர் ஏகப்பட்ட சொத்துகளுக்கு சொந்தக்காரர். இதனால் காசை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இவர் தி லெஜண்ட் என்ற திரைப்படத்தை தயாரித்து ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் லாபம் பார்த்து வருகிறது. அந்த வகையில் அண்ணாச்சி அடுத்தடுத்ததாக திரைப்படங்களை தயாரித்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

Next Story

- Advertisement -