Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
வெளியில் தான் ஹீரோ, வீட்டுக்குள்ள ஜீரோ.. நடிகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மனைவி
மன்னாதி மன்னர்களும், வீராதி வீரர்களும் கூட மனைவியின் கட்டுப்பாட்டில் இருந்த காலங்களும் இருக்கிறது. அப்படித்தான் புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் ஒருவர் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு நெருங்கிய உறவுகளை தள்ளி வைத்திருக்கிறாராம். ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் அந்த நடிகருக்கு உலக அளவில் பேரும், புகழும் இருக்கிறது.
அவர் நடிக்கும் படங்களும் பாக்ஸ் ஆபிஸையே தெறிக்க விட்டு விடும். இப்படி வெளியில் மாஸ் ஹீரோவாக இருக்கும் அந்த நடிகர் வீட்டுக்குள் மனைவிக்கு அடங்கிய கணவனாக தான் இருக்கிறாராம். நடிகர் இந்த அளவுக்கு உயரத்தில் இருப்பதற்கு முழு காரணம் அவரின் அப்பா தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
Also read: 50 வயதிலும் அடங்காத ஆசை.. பஸ் நிக்கிற ஸ்டாப் எல்லாம் சின்ன வீடு செட்டப் செய்யும் நடிகர்
நடிகருக்கு திருமணம் ஆன பிறகு கூட அவரின் அப்பா கால்ஷுட், சம்பளம், கதை கேட்பது போன்ற அனைத்து விஷயங்களையும் முன் நின்று செய்து வந்திருக்கிறார். இது பிடிக்காத நடிகரின் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக அந்த பொறுப்பை தன் கைவசம் எடுத்து இருக்கிறார். அதன் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பித்திருக்கிறது.
இப்படி சிறிது சிறிதாக ஏற்பட்ட மனஸ்தாபம் இப்போது நடிகர் தன் தந்தையை ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு சென்று இருக்கிறது. ஒரு கட்டத்தில் நடிகர் தன்னுடைய முக்கிய நிகழ்வில் கூட பெற்றவர்களை ஒதுக்கும் அளவுக்கு சென்றார். இதற்கெல்லாம் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கிய காரணமாக இருப்பது நடிகரின் மனைவி தானாம்.
சமீபத்தில் நடிகர் நடித்த படத்தின் முக்கிய நிகழ்வு ஒன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து நடிகரின் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் நடிகரின் மனைவி மட்டும் அங்கு ஆஜராகவில்லை. ஏனென்றால் மாமனார், மாமியார் அந்த நிகழ்ச்சிக்கு வருவது தான் என்று பலரும் கிசுகிசுக்கின்றனர்.
இப்படி நடிகரின் வீட்டு பிரச்சினை தான் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக நடிகர் இப்போது தன் மனைவியை கூட பிரிந்து விட்டதாக புது புரளியும் கிளம்பியுள்ளது. ஆனால் உண்மையில் தற்போது வெளிநாட்டில் இருக்கும் மனைவி அங்கிருந்தபடியே தன் கணவரை கண்ட்ரோல் செய்து வருவதாக திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Also read: 58 வயதில் 4வது திருமணத்திற்கு ரெடியான நடிகர்.. கல்யாண பொண்ணுக்கும் இது 3வது திருமணமாம்
