பெரிய ஹீரோக்களால் வந்த தலைவலி.. விஜய், அஜித் கையில் இருக்கும் மருந்து

தற்போது டாப் ஹீரோக்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவு வசூலை பெற்று விடுகிறது. ஒரு சில படங்கள்தான் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் பட்ஜெட்டை விட ஹீரோக்களின் சம்பளம் அதிகமாக உள்ளது.

அதிலும் டாப் ஹீரோக்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். அதிலும் தமிழ்சினிமாவை ஒப்பிடும்போது மற்ற மாநில நடிகர்களுக்கு சம்பளம் குறைவுதான். தற்போது இதை அறிந்த அந்த நடிகர்களும் சம்பளத்தை உயர்த்திக் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை தயாரிப்பதற்கு படாதபாடு பட்டுவிடுகிறார்கள். வெளியிலிருந்து வட்டிக்கு தான் பணத்தை வாங்கி படத்தை தயாரிக்கிறார்கள். அதிலும் ஹீரோக்களின் சம்பளம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கொடுத்து விடுவதால் அதற்கும் சேர்த்து தயாரிப்பாளர்கள்தான் வட்டி கட்டி வருகின்றனர்.

மேலும் படம் நன்றாக ஓடினால் கூட ஓரளவு போட்ட பணத்தை தயாரிப்பாளர்கள் எடுத்துவிடலாம். ஆனால் படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளர்களின் கதி இன்னும் மோசமாகிவிடும். இதனால் தற்போது தியேட்டரிலும் படத்திற்கான கட்டணத்தை அதிகரித்துள்ளனர்.

இப்போது ஹைதராபாத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து சினிமாத்துறையினர் காலவரையின்றி ஸ்ட்ரைகை ஆரம்பிக்க உள்ளனர். இதற்கெல்லாம் ஒரு வகையில் தமிழ் ஹீரோக்கள் தான் காரணம் என்றும் அவர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் போராடயுள்ளனர்.

இதனால்தான் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்தால் தான் தீர்வுக்கான முடியும் என பலர் கூறிவருகின்றனர். மேலும் இந்த போராட்டத்தினால் விஜய்யின் வாரிசு படத்தின் ஷூட்டிங் தற்போது தாமதமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பெரிய ஹீரோக்கள் விரைவில் இதற்கான தீர்வைக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்