வரிசை கட்டி நிற்கும் அருள்நிதியின் அடுத்த 4 படங்கள்.. கிடப்பில் போட்ட சூப்பர் ஹிட் 2ம் பாகம்

கடந்த 2010ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரனும் மு. க. தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதி.

வம்சம் படத்தை தொடர்ந்து டிமான்ட்டி காலனி, மௌனகுரு போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த அருள்நிதி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் களத்தில் சந்திப்போம். இந்த படத்தில் ஜீவா மற்றும் இவர் சேர்ந்து இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடித்திருப்பார்கள்.

ஆனால் இந்த படம் ரசிகர்களிடையே அவ்வளவு வரவேற்பைப் பெறவில்லை. அருள்நிதி இவர் தொடர்ந்து த்ரில்லர் படங்கள் நடித்து வந்தார். எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. வம்சம் மௌனகுரு, ஆறாது சினம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

ஆனால் இவருக்கு பொருத்தமாக அமைந்த படம், கடந்த 2015ஆம் ஆண்டு அசய் ஞானமுத்து எழுதி இயக்கிய த்ரில்லர் படமாக டிமான்ட்டி காலனி. ஆரம்பத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருவது போலவே படத்தை முடித்து இருப்பார்கள். இதனால் ரசிகர்களும் இரண்டாம் பாகம் எப்போது வரும் என காத்திருக்கின்றனர்.

அந்த சமயத்தில் படக்குழுவும் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாகவும் சொன்னார்கள். ஆனால் அப்பொழுது இருந்த வேகம் இவர்களிடம் இப்போது இல்லை. டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் இப்பொழுது வெளிவருவதில் யாருக்கும் விருப்பமில்லாத போன்று தெரிகிறது.

ஏனென்றால் அருள்நிதி அந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இப்பொழுது 2022ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் ‘டைரி’ படத்திலும், கரு பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி என்னும் நான்’ என்ற படத்திலும் D பிளாக், தேஜாவு போன்ற நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Next Story

- Advertisement -