புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அப்பாவை சந்தித்த போது விஜய் போட்ட முக்கிய கட்டளை.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என எஸ்ஏசி எடுத்த முடிவு

SA Chandrasekar: தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்கள். அது போல என்னதான் அப்பாவிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவருக்கு உடம்பில் பிரச்சினை என்று தெரிந்ததும் ரொம்பவே துடித்து போய்விட்டார் விஜய். அதாவது எஸ்ஏ சந்திரசேகருக்கு சமீபத்தில் தான் உடல்நிலை பிரச்சினை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது.

இதை கேள்விப்பட்டதும் விஜய் மருத்துவமனைக்கு சென்று அப்பாவுக்கு அரவணைப்பாக இருந்து பாசமாக பார்த்துக் கொண்டார். அப்பொழுது அப்பாவிடம் கண்டிஷனாக ஒரு முக்கியமான கட்டளையை போட்டிருக்கிறார். அதாவது இந்த வயதில் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இப்பொழுது அதுதான் உங்களுக்கு அவசியம்.

Also read: சிவகார்த்திகேயனுடன் முருகதாஸுக்கு இப்படி ஒரு பந்தமா? விஜய் மறுத்தும் தூக்கிவிட இதுதான் காரணம்

அதனால் நீங்கள் எந்தவித கமிட்மெண்டும் வைத்துக் கொள்ளாமல் இருங்கள் என்று கூறியிருக்கிறார். அதாவது தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் எஸ்ஏ சந்திரசேகர். அந்த வகையில் இனி நீங்கள் நாடகத்தில் நடிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் விஜய்யின் அப்பாவோ, தற்போது இந்த நாடகம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இதிலிருந்து எப்படி விலகுவது என்று மிகவும் தயங்கிக் கொண்டே இருந்தார். அதற்கு ஏற்ற மாதிரி விஜய் டிவியும் அவர்களுடைய சித்து வேலையை ஆரம்பித்து விட்டார்கள். அதாவது அக்டோபர் மாதம் 1ம் தேதி பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்க போகிறது.

Also read: விஜய்க்கு எடுத்த 7 படமும் சூப்பர் ஹிட் கொடுத்த ராசியான தயாரிப்பாளர்.. நன்றி மறக்காத தளபதி

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்தாலே அந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் நேரத்தை மாற்றி விடுவார்கள். அதனால் இரவு 10 மணிக்கு போடப்பட்டு வரும் கிழக்கு வாசல் சீரியலை மாலை 4 மணிக்கு மாற்றப் போகிறார்கள். இந்த விஷயம் தெரிந்ததும் விஜய்யின் அப்பா ரொம்பவே வருத்தப்பட்டு வருகிறார்.

காரணம் பிரேம் டைமில் ஒளிபரப்பானால் மட்டுமே சீரியல் அதிக அளவில் மக்களிடம் ரீச் ஆகும். அதை விட்டுவிட்டு மாலை 4 மணி என்றால், அந்த நேரத்தில் யாரும் சீரியலை பார்க்க மாட்டார்கள். அப்படி என்றால் இதில் நடிப்பதே வேஸ்ட் என்று எஸ்ஏசி, விஜய் டிவியின் சங்கார்த்தமே இனி வேண்டாம் முடிவெடுத்து இருக்கிறார். மேலும் இவரும் இந்த நாடகத்தில் இருந்து விலகி விட்டால் கிழக்கு வாசல் சீரியலின் டிஆர்பி ரேட்டிங் மிகவும் குறைந்து விடும்.

Also read: விஜய்க்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயம்.. லியோ பட ஆடியோ லான்ச்-க்கு தளபதி போட்ட கட்டுப்பாடு

- Advertisement -

Trending News