Nepoleon : நடிகர் சங்க கட்டிடத்திற்கு வாரி வழங்கிய வல்லவராயன்.. சிவகார்த்திகேயனை விட டபுள் மடங்கு தொகையாம்

nepoleon-sivakarthikeyan
nepoleon-sivakarthikeyan

நடிகர் சங்க கட்டிடம் எப்போது முழுமையாக நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் மத்தியில் நிலவி வருகிறது. விஜயகாந்த் காலம் தொடங்கி பல வருடமாக இந்த கட்டிடம் கட்ட போராட்டம் நடந்த வருகிறது. இப்போது விஷால், நாசர் மற்றும் கார்த்தி இதற்கான பணியில் இறங்கி இருக்கின்றனர்.

சில காரணங்களால் இந்த பணி முடக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது தீவிரமாக மீண்டும் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய், கமல் போன்ற பிரபலங்கள் தலா ஒரு கோடி ரூபாய் இந்த கட்டிடத்திற்காக கொடுத்திருந்தனர்.

அதேபோல் நடிகரும் அரசியல்வாதியும் ஆன உதயநிதியும் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் 50 லட்சம் தொகை கொடுத்திருந்தார்.

நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த நெப்போலியன்

இப்போது நடிகரும் மற்றும் அரசியல்வாதியுமான நெப்போலியன் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். இவர் ஏற்கனவே 2000 முதல் 2006 காலகட்டத்தில் நடிகர் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பில் இருந்துள்ளார்.

நன்றி தெரிவித்த நடிகர் சங்கநடிகர் சங்கம்

napoleon
napoleon

சினிமாவில் ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பட்டையை கிளப்பி வந்தார். மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சராக பதவியில் இருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான வல்லவனுக்கும் வல்லவன் என்ற படத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். இப்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிய உள்ள நெப்போலியன் நடிகர் சங்கத்திற்கு நிதி அளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement Amazon Prime Banner