சிங்கம் போல் அடுத்தடுத்து 4-5 பார்ட்டாக வரவிருக்கும் சூப்பர் ஹிட் படம்.. செகண்ட் பார்ட்டுக்கே வந்த பெரிய பஞ்சாயத்து

singam-suriya
singam-suriya

Suriya : ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான சிங்கம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் இதே கூட்டணியில் பார்ட் 2, பார்ட் 3 என அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வெற்றி கண்டனர். மேலும் சிங்கம் 4 படத்தையும் எடுக்க உள்ளதாக அறிவித்தனர்.

இந்த சூழலில் சிங்கம் படத்தை போல நான்கு, ஐந்து பார்ட் எடுக்க இயக்குனர் ஒருவர் திட்டம் போட்டிருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்து ரெடியாக வைத்திருக்கிறாராம்.

அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் தான் டிமான்டி காலனி. இந்த படம் நான்கு நண்பர்கள் பேய் காலனியில் சிக்கிக் கொண்டு எவ்வாறு பிரச்சினையை சந்திக்கிறார்கள் என்பதுதான்.

டிமான்டி காலனி 2 படத்தில் வந்த சிக்கல்

இந்த படம் அருள்நிதிக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

மேலும் இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இந்நிலையில் டிமான்டி காலனி 2 படத்தில் 30 நிமிஷம் மேலாக சிஜி வேலை இருக்கிறதாம். இதைப் பக்கமாக படக்குழு செய்திருக்கிறார்களாம்.

ஆனால் சிஜிக்கு மட்டுமே கிட்டதட்ட 4.5 கோடிக்கும் அதிகமாக செலவாகி இருக்கிறதாம். இதனால் பார்ட் படத்திருக்கே பணமில்லாமல் பஞ்சாயத்து நடந்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆனால் தான் அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து பிறகு அடுத்த பாகங்கள் எடுக்கலாமா என்ற முடிவை தயாரிப்பு நிறுவனம் எடுக்கும்.

அதற்குள்ளாகவே அடுத்தடுத்த பாகங்களை எடுக்க இயக்குனர் கோட்டை கட்டி இருக்கிறார். இது எந்த அளவுக்கு பலிக்கும் என்பது டிமான்டி காலனி 2 படம் வெளியானல் தெரியவரும்.

Advertisement Amazon Prime Banner