ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சிவகார்த்திகேயனுடன் முருகதாஸுக்கு இப்படி ஒரு பந்தமா? விஜய் மறுத்தும் தூக்கிவிட இதுதான் காரணம்

Actor Sivakarthikeyan: பக்கத்து வீட்டு பையன் போல் சினிமாவில் ரொம்பவே எதார்த்தமாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் தொடக்கத்தில் ஆங்கர் ஆகவும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும் தனது சினிமா பயணத்தை துவங்கி, தற்போது ஆக்சன் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போதைய டாப் இயக்குனர்களின் பேவரைட் சாய்ஸ் ஆக சிவகார்த்திகேயன் உள்ளார்.

இவர் இப்போது கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். இதில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிப்பதால் போர் காட்சிகள் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்த சிவகார்த்திகேயன் எங்கு சென்றாலும் தொப்பி போட்டுக் கொண்டு சென்று வந்தார்.

Also Read: 800 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனின் 5 படங்கள்.. பொங்கல் பண்டிகையை குறி வைத்த அயலான்

இப்போது அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தபின் நார்மல் ஹேர் ஸ்டைலுக்கு மாறி உள்ளார். இதனால் எஸ்கே 21 படத்தில் இரண்டு கெட்டப்பில் வருவார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏஆர் முருகதாஸுக்கும் தனக்கும் எப்படிப்பட்ட பந்தம் இருக்கிறது என்பதை தெரிவித்துள்ளார். ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடந்த போது அதற்கு சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட் தயார் செய்து இருக்கிறார்.

அதேபோல ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சிவகார்த்திகேயன் தான் ஆங்கர் ஆக இருந்திருக்கிறார். அதன் பின் சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பின்பு அவர் நடித்த மான் கராத்தே படத்தை ஏஆர் முருகதாஸ் தான் தயாரித்தார்.

Also Read: 300 கோடி பட்ஜெட், சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்.. உடும்பு பிடியாக பிடித்த இயக்குனர்

ஆனால் இயக்குனர் சங்கர் மற்றும் ஏஆர் முருகதாஸ் இருவரின் படங்களில் நடிப்பது தான் தன்னுடைய கோல் என்பதை மான் கராத்தே படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் தெரிவித்தார். எப்படியோ அவர் நினைத்த மாதிரி சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை ஏஆர் முருகதாஸ் தான் இயக்குகிறார். இதை அவரே ஏஆர் முருகதாஸின் பிறந்த நாளின் போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இந்த படத்தை முதலில் ஏஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து தான் எடுக்க ஆசைப்பட்டார். ஆனால் விஜய்க்கு படத்தின் கதை கொஞ்சம் கூட பிடிக்காததால் இப்போது சிவகார்த்திகேயன் கைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் துவங்க உள்ளது. இந்த படத்தில் விஜய் நடிக்க மறுத்தால் இந்த படத்தை வைத்து சிவகார்த்திகேயனை தூக்கி விட ஏஆர் முருகதாஸ் முடிவெடுத்துவிட்டார்.

Also Read: தோல்வியால் அடுத்தடுத்து விழுந்த மரண அடி.. விஜய், அஜித் பட இயக்குனரை தூக்கி விடும் சிவகார்த்திகேயன்

நிச்சயம் இந்த படம் எஸ்கே-வை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லப் போகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் ஜோடியாகி உள்ளார். இந்த படம் பக்கா ஆக்சன் என்டர்டைன்மென்ட் கொண்ட படமாக தெலுங்கு தயாரிப்பாளர் என்வி பிரசாத் தயாரிக்க உள்ளார்.

- Advertisement -

Trending News