விஜய் அஜித்தா? ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்த நடிகை.. கடைசியில் எடுத்த முடிவு, அந்தரத்தில் தொங்கும் நிலைமை

Vijay Ajith: நீயா நானா என்று போட்டி போட்டு ஒரே வரிசையில் விஜய் மற்றும் அஜித் தொடர்ந்து பந்தயத்தில் ஓடி வந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அஜித், நீங்க போகிற ஸ்பீடுக்கு என்னால முடியாது என்று அவருடைய பந்தயத்தின் அளவை குறைத்துக் கொண்டார். அதனால் தற்போது ஆட்ட நாயகனாகவும் வசூல் மன்னனாகவும் தொடர்ந்து விஜய் வெற்றி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் கமிட் ஆகி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் ஒரு சில வேலைகள் மட்டும் போய்க் கொண்டிருக்கிறது. அதில் ஒரு பாடல் மிஸ் ஆகிவிட்டது. அதற்காக தற்போது பிரசாந்த் ஸ்டூடியோவில் செட் போட்டு படபிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது.

இந்த ஒரு பாடல் காட்சிக்கு தெலுங்கு நடிகை கமிட் ஆகியிருந்தார். ஆனால் அவருக்கு அஜித் நடிக்கப் போகும் குட் பேட் அக்லி படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் அந்த படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கோட் படத்தில் இருக்கும் ஒரு பாடலுக்கு நடிக்கவா வேண்டாமா என்று ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்திருக்கிறார்.

குழப்பத்தில் இருக்கும் நடிகை

அதன் பிறகு கோட் படத்தில் ஆடப் போகும் ஒரு பாடல் ஐட்டம் டான்ஸ். அப்படி இதில் ஐட்டம் டான்ஸ் ஆடிவிட்டால் அஜித் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கைநழுவி விடும். அதனால் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கோட் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நோ சொல்லிவிட்டார்.

அந்த நடிகை வேறு யாருமில்லை சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் நடித்த ஸ்ரீலீலா. இவரிடம் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ரப்பர் போல் வளைந்து நெளிந்து டான்ஸ் ஆடுவது தான். அதனால் தான் விஜய்க்கு இணையாக இவரை போடலாம் என்று கமிட் பண்ணி இருந்தார்கள்.

ஆனால் தற்போது இதைவிட பெரிய ஆபர் கிடைத்ததால் அஜித்துக்கு ஓகே சொல்லி விஜய்க்கு நோ சொல்லிவிட்டார். கடைசி நேரத்தில் ஸ்ரீ லீலா எடுத்த முடிவால் கோட் படத்தில் உள்ள ஐட்டம் பாடல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் உடனே ஸ்ரீ லீலாவுக்கு பதிலாக வேறு யாரை போடலாம் என்று வெங்கட் பிரபு டீமுடன் கலந்தாய்வு பண்ணிக்கொண்டு வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்