வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய்க்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயம்.. லியோ பட ஆடியோ லான்ச்-க்கு தளபதி போட்ட கட்டுப்பாடு

Vijay-Leo: ஒரு படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ப்ரோமோஷன் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் விஜய் எப்போதுமே தனது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய விருப்பப்படுவார். அதிலும் அவருடைய குட்டி ஸ்டோரி, ரசிகர்களுக்கான அறிவுரை என பல சிறப்பு அம்சங்கள் இடம் பெறும்.

அந்த வகையில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது. இந்த முறை குறிப்பாக விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுதலாக இருக்கிறது. ஏனென்றால் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யை விமர்சிக்கும் படியாக ரஜினி ஒரு குட்டி கதை சொல்லி இருந்தார்.

Also Read : லியோவுக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் சம்பந்தமில்ல.. உண்மையை உரைக்கிற மாதிரி சொல்லிய தயாரிப்பாளர்

அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியலில் இறங்குவதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். ஆகையால் இதைப் பற்றிய விஷயங்களை லியோ மேடையில் விஜய் பேசுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் சமீபத்தில் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரியில் பல அசம்பாவித நிகழ்வுகள் அரங்கேறியது.

அதாவது ஏற்பாட்டாளர்கள் சரியாக நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு செய்யாத காரணத்தினால் மக்கள் அவதிப்பட்டனர். அது போல் லியோ நிகழ்ச்சியில் நடந்து விடக்கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடு போடப்பட்டிருக்கிறது. அதாவது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவட்டம் வாரியாக 200 டிக்கெட்டுகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

Also Read : விஜய் நிராகரித்ததால் ஷாருக்கான் எடுத்த அதிரடி முடிவு.. தளபதி போல் இயக்குனரை கழட்டிவிட்ட சம்பவம்

அதுவும் இன்றிலிருந்து இந்த விநியோகம் தொடங்கப்படுகிறது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே பேனர்கள் வைக்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் தங்களது சொந்த வாகனத்தில் வந்து பொது மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடும். அதேபோல் அந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர அதிகம் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு ஏ ஆர் ரகுமான் விழாவில் நடந்த தவறு போல் எதுவும் நடக்கக்கூடாது என்பதனால் தளபதிக்கு நாளுக்கு நாள் பயம் அதிகரிக்க கட்டுப்பாடுகள் பலமாக்கப்பட்டு வருகிறது.

Also Read : மதத்தை ஒழிக்க விஜய்யின் அப்பா செய்த வேலை.. ஆனா தன்னை வேறுமாறி அடையாளப்படுத்தும் தளபதி

- Advertisement -

Trending News