புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ரெட் ஜெயிண்ட் உடன் நேருக்கு நேராக மோதும் அண்ணாச்சி.. சண்டையில சட்டை கிளிய போறது உறுதி

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்துள்ள திரைப்படம் தி லெஜன்ட். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர்கள் வெளிவந்தன. அன்றே அனைவரின் வரவேற்பை பெற்றது, இது அண்ணாச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பாக நினைத்து மகிழ்ச்சி அடைந்து படத்தின் அடுத்தகட்ட வேலைக்கு தயாரானார்.

படத்திற்கு பிரம்மாண்டமாக செலவு செய்த அண்ணாச்சி  அவர் ஆடியோ லான்ச் இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக செய்தார். இந்த செயலும் படத்திற்கு மிக முக்கியமாக ப்ரொமோஷனாக அமைந்தது.

அண்ணாச்சி இந்த பிரம்மாண்டம் வரவேற்பு அனைத்தையும் பணமாக மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முதலில் நடிக்க வரும் பொழுது ஆசைக்காக மட்டும் நடிக்க வந்தார். மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து அண்ணாச்சி இதில் எப்படியாவது போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என முயற்சி செய்தார்

அதன் விளைவாக தனியாக விநியோகஸ்தர்களிடம் அதிக விலைக்கு படத்தை விற்க முயன்றார். ஆனால் விநியோகஸ்தர்களும் பிடி கொடுக்கவில்லை. இதற்கு காரணம் அண்ணாச்சியின் படம் பிரம்மாண்டம் என்ற காரணத்தால் மட்டுமே பார்க்கப்படுகிறது ஆனால் அண்ணாச்சியின் முகத்திற்காக யாரும் படத்தை பார்க்க போவதில்லை என்று விநியோகஸ்தர்களும் வாங்க மறுத்து விட்டனர். அண்ணாச்சி என்ன செய்வது என்று அமைதியாகிவிட்டார்.

படத்தின் வெளியீடு தேதி அறிவித்த பின் அண்ணாச்சி படத்திற்கான வேலை வேகமெடுத்தது. அவரவர் கேட்ட பணத்திற்கு படத்தை விற்றார். முக்கியமாக தமிழ்நாட்டில் அன்புச்செழியனிடம் அடைக்கலமானார். தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகளில் வெளியிட ஆசைப்பட்ட அண்ணாச்சிக்கு வந்தது புது சிக்கல்.

இது வரை அண்ணாச்சி அனைத்து தியேட்டர்களையும் வைத்துள்ள ரெட் ஜெயன்ட் முவிஸை சந்திக்கவில்லை. இதன் காரணமாக அண்ணாச்சிக்கு அனைத்து தியேட்டர்களும் கிடைப்பது சந்தேகம். காரணம் சந்தானம் நடிப்பில் குலுகுலு என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியிடப்பட உள்ளது.

சந்தானம் திரைப்படத்திற்கு உதயநிதி அதிக திரையரங்குகளை கொடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அண்ணாச்சியை கனவு கலைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவ்வளவு பண்ண அண்ணாச்சி ரெட் ஜெயன்ட் மூவிஸ் பார்க்காமல் படத்தை வெளியிட முடியாது என்பதுதான் உண்மை.  இதனால் உதயநிதி ஸ்டாலினை அண்ணாச்சி பார்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இல்லை என்றால் நேருக்கு நேராக மோதி சண்டையில் சாட்டை கிழிவது உறுதிதான்.

- Advertisement -

Trending News