மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறுது.. மொத்த படக் குழுவையும் பரிதவிக்க விட்ட சிம்பு

பன்முகத் திறமை கொண்ட சிம்பு டைமிங்கில் மட்டும் பஞ்சுவாலிட்டி கிடையாது என அவர் மீது நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு எழுகிறது. இருப்பினும் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கி இரண்டு படங்களிலும் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார்.

மேலும் இந்த இரண்டு படங்களிலும் சிம்புவிடம் நிறைய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக படத்தில் பணிப்புரிந்த பலரும் பேட்டியில் மூலம் தெரிவித்தனர். ஆனால் அதெல்லாம் பொய்யாக்கும் வகையில் சிம்பு மறுபடியும் தன்னுடைய வேலையை காட்டி விட்டார்.

Also Read: வா மோதி பார்க்கலாம் என கூறிய சூரி.. எதிர்பார்க்காத புது டிவிஸ்ட், சிம்புவுக்கு வந்த புதிய தலைவலி!

படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது, சொன்ன நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்காமல் இருப்பது போன்றவை தான் சிம்புவின் ஸ்பெஷாலிட்டி. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக அவர் மாறிவிட்டார் என நினைத்தனர். ஆனால் மீண்டும் வேதாளம் முருங்க மரம் ஏறுவது போல் தன்னுடைய குணத்தை காட்டி படக்குழுவை பரிதவிக்க விட்டுள்ளார்.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் பத்து தல. இந்த படத்தில் சிம்புவுடன் ப்ரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

Also Read: பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே எங்களுக்கு டார்கெட்.. விஷால் , சிம்பு செய்யும் ராஜதந்திரம்

இந்தப் படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த நவம்பர் மாதமே நிறைவடைந்த நிலையில் வரும் மார்ச் 30 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்தது. ஆனால் சிம்பு படத்தை முடித்த கையோடு பாங்காக் கிளம்பினார். மூன்று மாதம் தலைவன் அங்கு தான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

கேட்டால் அடுத்த படத்திற்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி சமாளிக்கிறார். இந்நிலையில் பத்து தல படத்தின் டப்பிங் வேலைகளுக்காக சிம்புவை அழைத்து இருக்கிறார்கள் பட குழுவினர். ‘என்னால் இப்பொழுது வர முடியாது. நீங்கள் வேண்டுமானால் பாங்காக் வாருங்கள், இங்கேயே டப்பிங்கை முடித்து கொடுக்கிறேன்’ என வேலையை காட்டி உள்ளது பழைய வேதாளம்.

Also Read: சிம்பு கேரியருக்கு முட்டுக்கட்டை போடும் அம்மா.. செக் உடன் வந்த தயாரிப்பாளர் வெறுத்துப் போன சம்பவம்

- Advertisement -spot_img

Trending News