திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

குணசேகரனுக்கு எமனாக நிற்கப்போகும் கதிர்.. என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம், தலைகீழாக மாறும் எதிர்நீச்சல்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது உணர்வுபூர்வமான செண்டிமெண்ட் உடன் கதை நகர்ந்து வருகிறது. அதாவது பாசத்தின் அர்த்தம் என்னவென்று தெரியாத குணசேகரன் தன் மகளின் கனவை சுக்குநூறாக உடைத்து விட்டார். அதனால் விரக்தியில் இருந்த தர்ஷினியை யாரோ ஒருவர் கடத்திவிட்டார்கள். இதனால் குடும்பத்தில் இருப்பவர்கள் நாலா பக்கமும் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையில் ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் தான் இதற்கு காரணமாக இருப்பார்கள் என்று ஒட்டுமொத்த குடும்பமும் நினைக்கிறார்கள். அதனால் இவர்கள் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து ஜனனி விசாரிக்க சொல்லி இருக்கிறார். அதற்கேற்ற மாதிரி போலீசும் குணசேகரன் வீட்டிற்கு வந்து ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை விசாரிப்பதற்கு ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார்கள்.

இதனை அடுத்து குணசேகரன் இவர்களை ஜாமின் எடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷன் போய் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை கூட்டிட்டு வந்து விடுகிறார். அப்பொழுது திருந்தாத குணசேகரன் மறுபடியும் என்னுடைய பொண்ணு உனக்கு தான் என்று கரிகாலனிடம் சொல்கிறார். இதை கேட்ட கதிர், தர்ஷினிக்கு ஆதரவாக அவள் சின்ன பொண்ணு இப்பல்லாம் அவளுக்கு கல்யாணம் வேண்டாம் அண்ணா என்று குணசேகரிடம் சொல்கிறார்.

Also read: ஜனனி அப்பாவை விட குணசேகரன் எவ்வளவோ பரவாயில்லை.. ஆட்டத்தை கலைக்க வரும் வாசு

இதை கேட்டு அதிர்ச்சியான குணசேகரன் என்னடா நிமிஷத்துக்கு ஒரு தடவை உன் பேச்சு மாறிக் கொண்டே இருக்கிறது என்று கதிரிடம் கேட்கிறார். தற்போது கதிரின் நடவடிக்கையும் பேச்சும் கொஞ்சம் மாறி இருக்கிறது. இப்படியே போனால் கண்டிப்பாக கதிர் முழுமையாக திருந்தி விடுவார். அத்துடன் குணசேகரன் பண்ணும் அனைத்து தில்லாலங்கடி வேலைக்கும் கதிர் தான் பக்க பலமாக இருந்தார்.

அந்த வகையில் குணசேகரனை எதிர்த்து கதிர் பேச ஆரம்பித்து விட்டால் அவருக்கு எமனாக கூட மாறிவிடுவார். அடுத்து தர்ஷினியை யாரு கடத்திருப்பார்கள், ஒருவேளை தர்ஷினியின் கனவை நிறைவேற்றும் விதமாக ஜீவானந்தம் தான் இதற்கு காரணமாக இருப்பாரா. அப்படி இருந்தால் கண்டிப்பாக தர்ஷினி அப்பத்தாவிடம் பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் அனைவரது சந்தேகமும் தற்போது ஜீவானந்தம் மீது இருப்பதால் ஜனனி சாரு பாலாவிற்குகு ஃபோன் பண்ணி ஜீவானந்திடம் பேச வேண்டும் என்று கேட்கிறார். அதன்படி பல மாதங்களுக்குப் பிறகு தற்போது ஜீவானந்தம் என்டரி கொடுக்கப் போகிறார். இந்த முறை இவருடைய என்டரி மொத்த கதையும் மாற்றும் அளவிற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி சுவாரசியத்தை அதிகப்படுத்த போகிறது.

Also read: மகேஷ் பாசத்துக்கு அடிமையாகி காதலில் விழுந்த ஆனந்தி.. கேள்விக்குறியாக நிற்கப் போகும் அன்பு

- Advertisement -spot_img

Trending News