மகேஷ் பாசத்துக்கு அடிமையாகி காதலில் விழுந்த ஆனந்தி.. கேள்விக்குறியாக நிற்கப் போகும் அன்பு

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்கப்பெண்ணே சீரியல் கடந்த பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் எதார்த்தமான கதையும், அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷின் ரொமான்ஸ், காதல் என்று அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது ஆனந்தியை இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றிய மகேஷுக்கு அடிபட்டுவிட்டது.

அவரை காப்பாற்றி தற்போது கண்ணும் கருத்துமாக கூடவே இருந்து பணிவிடை செய்து வருகிறார் ஆனந்தி. இந்த நிலையில் மித்ரா எப்படியாவது மகேசை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுக்கிறார். ஆனால் மகேஷுக்கு ஆனந்தி தான் ரொம்பவே பிடித்திருக்கிறது. தற்போது மகேசுக்கு அடிபட்டதால் இந்த நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மகேஷ் மனதில் இடத்தை பிடிக்க வேண்டும் என்று மித்ரா திட்டம் தீட்டுகிறார்.

ஆனால் மகேஷின் அப்பா மித்ரா கனவை சுக்கு நூறாக உடைத்து விட்டு, மகேஷ் பக்கத்தில் இருந்து ஆனந்தி பார்க்கட்டும் என்று கூறிவிட்டார். அதன்படி மகேஷ் ஆனந்தி கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் மகேஷ் மற்றும் ஆனந்தியின் காதலை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக இருவரும் தெரிவிக்கிறார்கள்.

Also read: எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த சோதனை.. கிடப்பில் போடப்பட்ட 7 விஷயங்கள்

பாவம் இதற்கிடையில் அன்பு தான் மாட்டிக் கொண்டு தவிக்கிறார். இதுவரை ஆனந்தி பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் மறைமுகமாக இருந்து எல்லாத்தையும் தகர்த்து எறிந்தது அன்புதான். அத்துடன் ஆனந்தியை எப்பொழுதும் சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மெனக்கிடு செய்து ஒவ்வொரு விஷயத்தையும் ஆனந்திக்காக ரிஸ்க் எடுத்து பண்ணுகிறார்.

ஆனால் இதையெல்லாம் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காத ஆனந்தி, அன்புவை தப்பாக மட்டுமே புரிந்து கொண்டு அவரை வெறுத்து வருகிறார். வழக்கம்போல் இவர்களின் காதல் முக்கோணத்தில் ஆரம்பித்திருக்கிறது. இதில் தற்போது வரை ஆனந்திக்கு பெஸ்ட் ஜோடி அன்பு தான் என்று மக்கள் ஒவ்வொருவரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் கதையின் படி மகேஷ் மற்றும் ஆனந்தி ரொம்பவே நெருக்கமாக வருகிறார்கள். கடைசியில் யாருடைய காதல் ஜெயிக்கப் போகிறது, யாரு வில்லனாக மாறப் போகிறார்கள் என்பதுதான் டுவிஸ்டாக இருக்கப் போகிறது. இதற்கிடையில் மித்ரா சூழ்ச்சி பண்ணி ஆனந்தி மற்றும் மகேஷ்சை பிரிக்க நினைக்கும் ஒவ்வொரு விஷயமும் அவர்களுடைய காதலுக்கு சாதகமாக அமையப் போகிறது.

Also read: மாமியாருக்காக அந்நியனாக மாறப்போகும் சக்தி.. குணசேகரனை விட கொடூரமாக மாறிய நாச்சியப்பன் 

- Advertisement -spot_img

Trending News