உண்மை சம்பவத்தை வைத்து கல்லா கட்டிய 6 இயக்குனர்கள்.. தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் நடக்கும் மேஜிக்

உண்மை சம்பவத்தை தனுஷிற்கும், சூர்யாவுக்கும் கட்சிதமாக பொருந்திய கதாபாத்திரங்கள். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்களை எடுப்பதற்கும், நடிப்பதற்கும் ஒரு தனி தைரியம் தேவை. அதிலும் தேசிய விருதுகளை குவிக்கும் அளவிற்கு எடுக்கப்பட்ட 7 திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

அசுரன்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி இயற்றப்பட்ட இத்திரைப்படத்தில் கீழ் ஜாதியினரின் உரிமைகளை மேல் ஜாதியினர் எப்படி பறிக்க நினைக்கிறார்கள் என்பதை ஆழமாக இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி இருப்பார். ஜி.வி பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்த நிலையில், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது இத்திரைப்படம் பெற்றிருந்தது.

Also Read : வெறித்தனமாக வெளியான வாத்தி பட போஸ்டர்.. தளபதியுடன் மல்லுக்கு நிற்கும் தனுஷ்

விசாரணை : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் எழுத்தாளர் சந்திரகுமாரின் லாக் அப் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகருக்கான விருது சமுத்திரக்கனிக்கும், சிறந்த எடிட்டிங்காண விருது என 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

சூரரை போற்று: இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு ஓடிடியில் ரிலீசான இத்திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா, கருணாஸ் உள்ளிட்டோரின் நடித்திருந்தனர். பிரபல விமான நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இயற்றப்பட்ட இத்திரைப்படத்திற்கு, சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் என 5 தேசிய விருதுகள் அண்மையில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : அடுத்த தேசிய விருதை வாங்க ரெடியாக இருக்கும் சூர்யா.. அடுத்தப் படத்தை அறிவித்த கெத்தான இயக்குனர்

ஜெய் பீம்: நடிகர் சூர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு ஓடிடியில் ரிலீசான இத்திரைப்படத்தை இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியிருந்தார். 1993ஆம் ஆண்டு இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தின் உண்மையை அறிய, வழக்கறிஞருடன் அவரது மனைவி போராடி நியாயத்தை நிலை நாட்டினார். இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஆஸ்கார் வரை சென்றுள்ளது என்பது குறிப்புடத்தக்கது.

தீரன் அதிகாரம் ஒன்று : இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு திரையரங்கில் ரிலீசான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடிகர் கார்த்தி,ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்து இருப்பவர். ஆபரேஷன் பவாரியா என்ற உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் கார்த்திக் தீரன் என்ற உண்மை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

Also Read : மீண்டும் வரலாற்று படத்தில் நடிக்கப் போகும் விக்ரம்.. இந்த தடவை ஆதித்ய கரிகாலன் கிடையாது

பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படத்தின் முதல் பாகம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி சோழர்கள் காலத்தில் வாழ்ந்த மன்னர்களைப் பற்றியும், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றிய உண்மை சம்பவம் இந்நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்ணன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான கர்ணன் திரைப்படம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மாரிசெல்வராஜ் இயக்கி இருப்பார். சந்தோஷ் நாராயணனின் இசை இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.

Also Read : யாருமே எதிர்பார்க்காததை நடத்தி காட்டும் சர்தார்.. கார்த்திக்கு கொட்டும் பணமழை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்