சரத்குமாரை சுப்ரீம் ஸ்டாராய் உருவாக்கிய டைரக்டர்.. மிஸ்டர் மெட்ராசுக்கு கொடுத்த 90% ஹிட்

The director who is made sarathkumar as supreme star: தமிழ்,தெலுங்கு திரை உலகில் முன்னணி வில்லனாக இருந்து பின்பு  நாயகனாக மாறியவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். 1974 மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்ற சரத்குமார் வாய்ப்பு தேடிய நிலையில் அவரது ஆஜானு பாகவான உடல் அமைப்பை பார்த்து வில்லன் கேரக்டர்களே அமைந்தது.

வில்லனாக அறிமுகமானவர் நடிகராகவும், குணசித்திர நடிகராகவும்,பெண் வேடம் என எதையும் தயங்காமல் ஏற்று இன்றுவரை வெள்ளி திரையில் ஜொலித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிக்க வந்து அரை நூற்றாண்டை தொடவிருக்கும் சரத்குமார் அவர்கள் இன்றும் இளமையாக தனது உடல் அமைப்பை பேணி வருகிறார்.

தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவில் டைம் மேனேஜ்மென்ட் என்றால் இந்த இயக்குனரை அடிச்சுக்க ஆள் இல்லை என்பது போல் பக்காவாக செயல்படுவார் கே எஸ் ரவிக்குமார் பழமை வாதத்தை சிதைக்காமல்  விறுவிறுப்புடன் நகைச்சுவை கலந்து குடும்பப் பாங்கான திரைப்படங்களை தரவல்ல கே எஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமாரின் நட்பு அளப்பரியது.

Also read: ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம்.. விஷயத்தை போட்டு உடைத்த கேஎஸ் ரவிக்குமார்

1990  வெளிவந்த புரியாத புதிர் திரைப்படத்தில் கேஸ் ரவிக்குமார்  மற்றும் சரத்குமார் ஒன்றாக இணைந்தனர். தொடர்ந்து சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக என  தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றான கலந்து  பல்வேறு  புதுமைகளுடன் கூடிய கிராமத்து சப்ஜெக்ட்களில் சரத்குமாரை நடிக்க வைத்து அவருக்கு பெயரும் புகழும் வாங்கி தந்தார் கே எஸ் ரவிக்குமார்.

கே எஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் கூட்டணி என்றுமே சோடை போனதில்லை என்ற கூற்றுக்கு ஏற்ப கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் சரத்குமார் நடித்த அத்தனை படமும் ஹிட் என்று கூறலாம். வில்லனாக இருந்தவரை நாயகனாக மாற்றி  சுப்ரீம் ஸ்டார் என்ற புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர் கே எஸ் ரவிக்குமார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கடந்த ஆண்டு வெளியான சரத்குமாரின் பரம்பொருள், போர் தொழில்  போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. போர் தொழில் வெற்றி விழாவின் போது காஸ்டியூம் டிசைனர் மற்றும் செய்தியாளர்களுக்கு இடையே நடந்த பிரச்சனையில் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டு பிரச்சினை சுமுகமாக முடித்து தான் ஒரு ஸ்டார் அல்ல சுப்ரீம் ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்தார் சரத்குமார்.

Also read: செகண்ட் இன்னிங்ஸில் தவறவிட்ட 5, 80ஸ் ஹீரோக்கள்.. கொடி கட்டி பறக்கும் சரத்குமார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்