செகண்ட் இன்னிங்ஸில் தவறவிட்ட 5, 80ஸ் ஹீரோக்கள்.. கொடி கட்டி பறக்கும் சரத்குமார்

Sarathkumar: ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களாக இருந்த ஒரு சிலர் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவில் நீடித்து வருகிறார்கள். அதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர் சரத்குமார். ஒரு கட்டத்தில் இனி ஹீரோவாக நடித்தால் செல்லுபடி ஆகாது என்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார்.

கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட நடிகர்கள்

இன்று 2கே கிட்ஸ்களுக்கு பொன்னியின் செல்வன் பழுவேட்டையர் மற்றும் போர்த்தொழில் போன்ற படங்களால் நல்ல நடிகராக தெரிகிறார். இப்படி கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தவறவிட்ட ஐந்து 80’ஸ் நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

சுரேஷ் மேனன்: நடிகர் சுரேஷ் மேனன் புதிய முகம் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், ஹீரோவாகவும் அறிமுகமானார். அந்த படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த பிரபல நடிகை ரேவதியை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தானா சேர்ந்த கூட்டம் என்னும் படத்தில் உத்தமன் என்னும் கேரக்டரில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஜொலிக்க தவறிவிட்டார்.

ராஜா: தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் படு பிஸியாக இருந்தவர்தான் நடிகர் ராஜா. பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் சதிலீலாவதி, கடலோர கவிதைகள், வேதம் புதிது, அருணாச்சலம் போன்ற பல ஹிட் படங்களில் நடித்த ராஜா மீண்டும் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு அப்பா கேரக்டரில் நடித்திருந்தார் . ஆனால் அதன் பின்னர் ராஜாவுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

Also Read:விஜயகாந்துக்கு இறுதி மரியாதையை செலுத்த வராத 5 நடிகர்கள்.. ஒரே ஊர்ல இருந்துட்டு எட்டிப் பார்க்காத துரோகி

சுதாகர்: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் ஹீரோவாக வெற்றி பெற்றவர்தான் சுதாகர். ஒரு காலகட்டத்தில் கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் போட்டியாக இருந்தவர். அப்போதே சரியான பாதையில் பயணிக்காமல் கிடைத்த வெற்றியை தவற விட்டு விட்டார். அதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிலும் அவர் ஜொலிக்கவில்லை.

ராம்கி: தமிழ் சினிமாவில் ரொம்பவும் அழகான கதாநாயகர்களின் லிஸ்டில் கண்டிப்பாக ராம்கிக்கு இடம் இருக்கும். இன்றுவரை அதே இளமை மற்றும் உடலமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இவர் மாசாணி என்னும் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார், நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் கதைகளை சரியாக தேர்ந்தெடுக்காமல் கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார்.

பாக்யராஜ்: பாக்கியராஜ் தன்னை ஒரு நல்ல இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்ட அதே சமயத்தில் நல்ல நடிகனாகவும் வளர்ந்து வந்தார். இவருடன் போட்டி போட்டு கமல் மற்றும் ரஜினி படங்களே பின்வாங்கும் அளவுக்கு இவருடைய வெற்றி இருந்தது. தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் நிறைய நல்ல கேரக்டர்கள் இவருக்கு கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அவர் பெறவில்லை.

Also Read:கேப்டனை பார்க்க தவியாய் தவித்த விஜய்.. விஜயகாந்தை தனிமைப்படுத்தி கண்ட்ரோலில் வைத்திருந்த குடும்பம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்