Ajith: எல்லை மீறும் அஜித் வெறியர்கள்.. தியேட்டருக்குள் நடந்த கலவரம், தட்டி வைப்பாரா ஏ கே.?

Actor Ajith: எப்போதுமே சோசியல் மீடியாவில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே வாய்க்கா தகராறு இருந்து கொண்டே இருக்கும். அது அவ்வப்போது எல்லை மீறிய கதையும் உண்டு.

அப்படித்தான் தற்போது சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. இன்று அஜித் தன்னுடைய 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதை தொடர்ந்து தீனா படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.

அதை ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி வரும் நிலையில் விஜய் ரசிகர்களையும் வம்புக்கு இழுத்துள்ளனர். அதன்படி கில்லி ரீ ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்களை கடந்துள்ளது.

எல்லை மீறும் அஜித் ரசிகர்கள்

அப்போதே விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை சீண்டும் விதமாக போஸ்ட் போட்டு வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று கில்லி ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் அஜித் ரசிகர்கள் அட்டூழியம் செய்திருக்கின்றனர்.

சிலர் படம் ஓடிக் கொண்டிருக்கும்போது அஜித் அஜித் என்று கத்தி வெறுப்பேற்றி இருக்கின்றனர். அதேபோல் காசி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த கில்லி படத்தின் பேனர்களும் கிழிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தீனா ஓடிக்கொண்டிருக்கும் போது தியேட்டர் உள்ளேயே பட்டாசுகளை வெடித்த சம்பவமும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியவில்லை.

அஜித் ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைத்த நிலையில் இது போன்ற செயல்களை நிச்சயம் தடுக்க வேண்டும். அதற்காக ஒரு அறிவிப்பாவது வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

Next Story

- Advertisement -