Connect with us
Cinemapettai

Cinemapettai

yash-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை நம்ப வைத்து கழுத்தறுத்த இயக்குனர்.. கேஜிஎஃப் நடிகரை வைத்து காய் நகர்த்தும் சன் பிக்சர்ஸ்

விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு இவருக்கு பிடித்தமான இயக்குனருடன் கூட்டணி வைக்கலாம் என்று இருந்தவரை நம்பி ஏமாற்றி விட்டார் இயக்குனர்.

விஜய் தற்போது லோகேஷ் கூட்டணியில் லியோ படப்பிடிப்பை முக்கால்வாசி முடித்து விட்டார். இந்நிலையில் மீதமுள்ள காட்சியை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடித்து விட வேண்டும் என்று மொத்த பட குழுவும் பரபரப்பாக வேலை பார்த்து வருகிறார்கள். இதற்கடுத்து விஜய்க்கு சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனருடன் கூட்டணி வைக்கலாம் என்று நினைத்திருந்தார்.

ஆனால் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் மற்ற படங்களில் பிசியாக கவனத்தை செலுத்தி வந்தார். அதன் பின் வேறு வழி இல்லாமல் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபுவிடம் கொடுத்து விட்டார். இதனால் இவர் நம்பி இருந்த இயக்குனர் இவரை மோசம் செய்யும் விதமாக ஏமாற்றி கழுத்து அறுத்து விட்டார்.

Also read: அடிப்பட்ட நடிகர்களை தூக்கி விட்ட 5 இயக்குனர்கள்.. அஜித், சிம்புக்கு ஏணிப்படியாக அமைந்த விஜய் பட இயக்குனர்

அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை விஜய்க்கு மெர்சல், பிகில் படத்தை இயக்கிய அட்லீ. இவர் விஜய் உடன் படம் எடுக்க இருந்த நிலையில் ஷாருக்கான் வைத்து பாலிவுட்டில் ஜவான் படத்தை எடுப்பதில் மிகவும் பிசியாகி விட்டார். இப்படத்தை முடித்த பின் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து விஜய்யை வைத்து இயக்கப் போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜய்யை ஏமாற்றி விட்டார்.

ஆனால் இவர் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் உடன் படத்தை பண்ணுவதாக அக்ரிமெண்ட் எல்லாம் போட்டுவிட்டார். அதன்படி இந்த நிறுவனத்துடன் கூட்டணி வைத்த இவர் விஜய்யை கழட்டி விட்டு விட்டார். இவரைத்தான் விஜய் நெருங்கிய நண்பராகவும், செல்ல தம்பியாகவும் சமீப காலமாக பாசத்தை கொட்டி வந்தார்.

Also read: விக்ரம் வசூல், லியோ பிசினஸ் மொத்தமாக அள்ளிய ஜெயிலர்.. சம்பவம் செய்யும் நெல்சன்

ஆனால் கடைசியில் இவருக்கே பெரிய டாட்டா காட்டி விட்டார். அதற்கு பதிலாக இப்பொழுது கேஜிஎஃப் நடிகர் யாஷ் மற்றும் அல்லு அர்ஜுன் இருவருக்கும் கதை சொல்லி இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இவர் சொன்ன கதை பிடித்துப் போனதால் இவர்களில் யாரையாவது ஒருவரை வைத்து படத்தை இயக்கப் போகிறார்.

இதனால் அட்லீ மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் அக்கடதேச நடிகர்கள் தான் நடிக்கிறார்கள். அத்துடன் இப்படத்தை பான் இந்தியா படமாக எடுப்பதற்கு சன் பிக்சர்ஸ் முடிவெடுத்து இருக்கிறது. இதுதான் இவர்கள் இறங்கும் பான் இந்தியாவின் முதல் படம். அதனால் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுப்பதற்கு சன் பிக்சர்ஸ் மட்டும் அட்லீ காய் நகர்த்தி வருகிறார்கள்.

Also read: தந்திரமாய் செயல்படும் வெங்கட் பிரபு, விஜய்.. முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க போடும் திட்டம்

Continue Reading
To Top