குணசேகரன் வீட்டு மருமகள்கள் வாடிவாசல் தாண்டி வந்தாச்சு.. இனி ஒவ்வொரு நாளும் ட்விஸ்ட்க்கு பஞ்சமே இருக்காது

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்தடுத்து வரக்கூடிய திடீர் திருப்பங்களால் கதையின் வேகத்தை இன்னும் அதிகரிக்க செய்கிறது. குணசேகரன், வீட்டில் உள்ள அனைவரிடமும் கை வைத்தியம் பார்க்கப் போகிறேன் என்று பொய் சொல்லி கதிரை மட்டும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு போகிறார்.

ஆனால் அவர் முன்னாள் போலீஸ் என்கவுண்டர் ஆபிஸரை சந்தித்து ஜீவானந்தத்தை காலி பண்ண போகிறார். குணசேகரனின் வீட்டில் உள்ள பெண்கள் சொத்தை மீட்டு எப்பொழுது எடுக்கிறார்களோ, அப்பொழுது ஜீவானந்தத்தின் கதையை க்ளோஸ் பண்ணி விட வேண்டும் என்று காரியத்தில் இறங்கி விட்டார். மேலும் இவர் நடிக்க தான் செய்கிறார். இவருக்கு பக்கவாதம் ஏதும் இல்லை என்று நந்தினி மட்டும் புரிந்து கொண்டார்.

Also read: பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

அடுத்தபடியாக ஜனனி, போலீஸ் மூலமாக ஜீவானந்தம் இதற்கு முன்னதாக ஏமாற்றிய அந்த நபரை சந்தித்து ஏதாவது குழு கிடைக்குமா என்று முயற்சி செய்து பார்க்கிறார். மேலும் இவ்வளோ நாள் சும்மாவே ஜனனி பின்னாடி டிரைவர் மாதிரி சுற்றிக் கொண்டிருந்த சக்தி தற்போது தான் வாய் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார். அத்துடன் ஜனனிக்கு சப்போர்ட்டாக, ஒற்றுமையாக இருப்பது பார்க்க நன்றாக இருக்கிறது.

இதற்கு அடுத்து ரேணுகா மற்றும் நந்தினி, பள்ளிக்கூடத்திற்கு சென்று மகளை அழைத்துச் செல்ல போயிருக்கிறார்கள். அங்கே பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் வரவில்லை என்பதால் அனைவரும் பதற்றமாக இருக்கிறார்கள். அப்பொழுது ரேணுகா நான் வேண்டுமென்றால் முயற்சி செய்து பார்க்கவா என்று கேட்கிறார். அப்பொழுது நந்தினி மற்றும் இவருடைய மகள், உனக்கு டான்ஸ் தெரியுமா என்று கேட்கிறார்.

Also read: பக்கவாதம் வந்தாலும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் குணசேகரன்.. அடி முட்டாள்கள் என நிரூபிக்கும் தம்பிகள்

அடுத்தபடியாக இவர் திருமணத்திற்கு முன் பரதநாட்டியம் கற்றுக் கொண்டது, சொல்லிக் கொடுத்தது எல்லாம் ஒரு பிளாஷ்பேக் போல் வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் அங்கு இருக்கும் மாணவர்களுக்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தற்போது ரேணுகாவும் இனிமேல் பள்ளிக்கூடத்தில் டான்ஸ் டீச்சர் ஆக பணிபுரிய போகிறார்.

இதனைத் தொடர்ந்து குணசேகரன் வீட்டில் உள்ள நான்கு மருமகளும் வாடி வாசலை தாண்டி அவர்கள் சொந்த காலில் ஜெயிப்பதற்கு வந்து விட்டார்கள். இதில் ஈஸ்வரி கல்லூரியின் சிறப்பு பேச்சாளர், ரேணுகா பரதநாட்டியம் டீச்சர், நந்தினி சமையல் கேட்டரிங், ஜனனி பிசினஸ் பண்ணப் போகிறார். இப்படி தொடர்ந்து இவர்களின் ஒவ்வொரு திறமையும் வெளிக்கொண்டு வருவதால் கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

Also read: மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

- Advertisement -spot_img

Trending News