வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பக்கவாதம் வந்தாலும் பக்கம் பக்கமாக வசனம் பேசும் குணசேகரன்.. அடி முட்டாள்கள் என நிரூபிக்கும் தம்பிகள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் அதிரடியான பேச்சை மட்டுமே வைத்து கதையை உருட்டுகிறார்கள். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும் என்பதற்கு ஏற்ப, ஓவராக பேசிக் கொண்டு வரும் குணசேகரனின் பேச்சு தற்போது போரடிக்கும் வகையில் இருக்கிறது. அடுத்தடுத்து என்ன விஷயங்களோ அது சம்பந்தமாக கதை நகர்ந்தால் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக அமையும்.

இவர் சொத்துக்காக பக்கவாதம் வந்தது போல் நடிக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதாவது இந்த நோய் வந்தவர்களுக்கு முதலில் வாய்தான் கோணி கொண்டு போகும். ஆனால் இவர் என்னமோ பக்கவாதம் வந்ததுக்கு அப்புறம் தான் பக்கம் பக்கமாக டயலாக்கை பேசிக்கொண்டு வருகிறார். இது தெரியாமல் அங்கு இருக்கும் மருமகள்கள் சொத்தை நாங்கள் மீட்டெடுப்போம் என்று சொல்கிறார்கள்.

Also read: மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

அடுத்ததாக குணசேகரன், வீட்டில் பொய் சொல்லிக்கொண்டு கதிரை மட்டும் அழைத்து சென்னைக்கு கிளம்புகிறார். அங்கே ஜீவானந்தத்தை விட பெரிய ரவுடி ஆட்கள் இருக்கிறார்கள் என்று, அவரை வைத்து சொத்தை மீட்கலாம் என பிளான் பண்ணுகிறார். இது தெரியாமல் இவர் என்ன சொன்னாலும் முட்டாள்தனமாக தம்பிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் குணசேகரனை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போது இவருடைய மனைவி ஈஸ்வரியை காணும். என்னதான் பிடிக்காத புருஷனாக இருந்தாலும் அவர் இல்லாமல் அடிக்கடி சாக்கு போக்கு சொல்வது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. தற்போது இவர்கள் அனைவரையும் விட ரேணுகா, நந்தினி பெர்பார்மன்ஸ் அடி தூளாக இருக்கிறது.

Also read: சொத்துக்காக செத்து செத்து விளையாடும் குணசேகரன்.. நந்தினி எடுக்க போகும் புது அவதாரம்

இதனை அடுத்து ஜனனி, ஜீவானந்தம் யாரு எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிப்பதற்காக துப்பு துலக்க ஆரம்பித்து விட்டார். அதற்காக இவருக்கு தெரிந்த போலீஸ் இடம் விசாரிக்கிறார். இதெல்லாம் தெரிந்தால் மட்டும் ஜனனியால் என்ன பண்ண முடியும். இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஜனனி வெற்றி பெறவே இல்லை.

ஆனால் ஜனனி கொடுத்த நம்பிக்கையால் அந்த வீட்டு மருமகள் வாயை திறந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு விதத்தில் அவரை பாராட்டப்பட வேண்டிய விஷயம். அடுத்ததாக சக்தியை இதுவரை டம்மியாகவே வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனனிடம் அடிக்கடி பேசிக் கொள்வதை பார்க்கும் பொழுது இவர்களுடைய கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி பார்க்க நன்றாக இருக்கிறது. மேலும் குணசேகரன் மற்றும் ஜனனியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளால் என்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: படுத்த படுக்கையாக இருந்தும் நக்கல் குறையாத குணசேகரன்.. புருஷனுக்காக ஜீவானந்திடம் பிச்சை கேட்கும் ஈஸ்வரி

- Advertisement -

Trending News