மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடமிருந்து ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கதையை மிஞ்சும் அளவிற்கு குணசேகரன் நடிப்பு அனைவரையும் விரும்பி பார்க்க வைக்கிறது. அத்துடன் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிற அளவிற்கு சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் கதை வருகிறது. அதனாலயே எதிர்நீச்சல் சீரியல் அனைத்திற்கும் சிம்ம சொப்பனமாக முதலிடத்தில் இருக்கிறது.

அந்த வகையில் குணசேகரனின் சொத்து, கையை விட்டு கொஞ்ச கொஞ்சமாக போனதால், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் புலம்பிக் கொண்டே இருக்கிறார். மேலும் இவருடைய உடல் நிலையை காட்டி, அந்த வீட்டில் இருக்கும் பெண்களை அனுதாப பட வைக்கிறார். இதன் மூலமாக சொத்தை மீட்கலாம் என்று ஆடிட்டர் மற்றும் குணசேகரன் பிளான் போட்டு இருக்கிறார்கள்.

Also read: சொத்துக்காக செத்து செத்து விளையாடும் குணசேகரன்.. நந்தினி எடுக்க போகும் புது அவதாரம்

இது குணசேகரனின் பிளானாக இருந்தாலும் யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர் நினைத்தபடி அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் ஜீவானந்தத்திடம் போராடி அந்த சொத்தை மீட்க வேண்டும் என்று முயற்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள். அதற்காக இவங்களுக்கு சப்போர்ட்டாக ஒரு அட்வகேட் வேணும் என்று தேடுகிறார்கள்.

அந்த வகையை சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில், எந்த நாடகமாக இருந்தாலும் அதில் ரோஜா சீரியலில் நடித்த அட்வகேட் அர்ஜுன் தான் வாதாடுவார். அதனால் இந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சப்போர்ட்டாக அர்ஜுன் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி அர்ஜுன் வந்தால் இன்னும் அதிகமாகவே இந்த நாடகத்தை கொண்டாடி வருவார்கள்.

Also read: படுத்த படுக்கையாக இருந்தும் நக்கல் குறையாத குணசேகரன்.. புருஷனுக்காக ஜீவானந்திடம் பிச்சை கேட்கும் ஈஸ்வரி

அடுத்தபடியாக என்ன தான் குணசேகரன் வலியால் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாலும், எதற்கும் அசராமல் மருமகள்கள் இருப்பது இவர் செஞ்ச பாவத்துக்கு கிடைத்த தண்டனையாக தான் இருக்கிறது. அத்துடன் ஜீவானந்தத்தின் கேரக்டரை அடுத்து எப்படி கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல் கொஞ்சம் சொதப்பிக்கொண்டு தான் வருகிறார்கள்.

மேலும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த குணசேகரன், ஆத்தா மீனாட்சியை ஒத்த கையுடன் கும்பிடும் போது, இப்படி எல்லாம் சாமி கும்பிடலாமா என்று யோசிக்கும் அளவிற்கு வித்தியாசமாக இருந்தது. அடுத்ததாக இவருடைய அம்மா விசாலாட்சி, மகனை இந்த நிலைமையில் பார்த்துவிட்டு கண்கலங்கி பேசுகிறார்.  பெத்த மனசு பிஞ்சு பிள்ளை மனசு கல்லு என்பதற்கு ஏற்ப குணசேகரின் நிலைமை கண்டு இவருடைய அம்மா மிகவும் வருத்தமாக இருக்கிறார். ஆக மொத்தத்தில் குணசேகரனின் டகால்டி வேலையை காட்டி அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.

Also read: ஒட்டுமொத்த கதையும் ஓவர் டேக் செய்த குணசேகரனின் மகா நடிப்பு.. தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் ஜீவானந்தம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்