Connect with us
Cinemapettai

Cinemapettai

ilayaraja-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முட்டாள், தண்டம், ஈன புத்தி எல்லாம் சேர்ந்த ஒரு கலவை தான் இளையராஜா.. மறுபடியும் சண்டைக்கு இழுக்கும் பிரபலம்

எல்லா தெரிஞ்சு தான் பேசினேன் என்று மறுபடியும்  இளையராஜாவை பற்றி காட்டமாக விமர்சித்த பிரபலம்.

திரை உலகில் 1500 படங்களுக்கு இசையமைத்து ஞானி என்ற பட்டத்தை எல்லாம் பெற்ற இளையராஜாவின் குணநலன்களை குறித்து பிரபலங்கள் வரிசையாக காட்டும் தெரிவித்து வருகின்றனர். அதிலும் இளையராஜாவின் சிஷ்யர் ஒருவர் சில வருடங்களாகவே அவரைக் குறித்து கடுமையாக விமர்சிக்கிறார்.

அதிலும் இப்போது அவரை முட்டாள், தண்டம், ஈன புத்தி கொண்ட கலவைதான் இளையராஜா என்று மறுபடியும் பேட்டி ஒன்றில் காட்டுமாக பேசி  சண்டைக்கு இழுத்திருக்கிறார். ஒரு இசைஞானியாய் அவர் எனக்கு குரு. ஆனால் ஒரு சக மனிதனாய் பார்த்தால், அவர் ஒரு முட்டாள், பண்பில்லாதவர் என இளையராஜாவை வாய்க்கு வந்தபடி திட்டி உள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் .

Also Read: மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னதெல்லாம் சுத்த பொய்.. முகத்திரையை கிழித்த பிரபலம்

சினிமா துறையில் இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இளையராஜாவை சாமி தான் என்று அழைப்பார். அந்த அளவிற்கு அந்த மனிதனிடம் ஆன்மீகம் குடி கொண்டிருந்தது. ஆன்மீகத்திற்குள் செல்ல செல்ல சகிப்புத் தன்மையும் பரந்த மனப்பான்மையும் வளர வேண்டும்.

ஆனால் அந்த ஆன்மீகம் வெளியில் போடும் வேஷம் மட்டும்தான். ஒரு ஆன்மீகவாதி இப்படி நடந்து கொள்வது எப்படி சாத்தியம். பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவருக்கு கொடுக்கக் கூடிய பட்டத்திற்கும் கௌரவத்திற்கும் அவர் தகுதி அல்ல. 

Also Read: இரட்டை அர்த்த வரிகளை பார்த்து முகம் சுழித்த பாடகி.. பாட முடியாதா என ரோஸ்ட் செய்த இளையராஜா

அதிலும் இளையராஜாவின் ஈன புத்தி எப்படிப்பட்டது என்றால் மற்ற  மதத்தினரை இழிவு படுத்தி பேசக்கூடிய அளவுக்கு கேவலமானது என்று பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்  திட்டி தீத்துள்ளார். இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாது முட்டாள், தண்டம் எனவும் பேசியுள்ளார். 

நான் எல்லாம் தெரிந்து தான் திட்டுகிறேன். மீடியா முன்பு பேசினால் எங்கே எங்கே செல்லும், எப்படி எப்படி எல்லாம் எனக்கு பிரச்சனை வரும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதுதான் உண்மை என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: கங்கை அமரனை அடித்து விரட்டிய இளையராஜா.. காரணமாக இருந்த பிரபலம்

Continue Reading
To Top