Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
அந்தரங்க தேவைக்கு மட்டுமே பயன்படுத்திய நடிகர்.. 8 வருட லிவிங் ரிலேஷன்ஷிப்பில் நிம்மதியை தொலைத்த நடிகை
பிரபல நடிகை ஒருவர் மூத்த நடிகர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே எட்டு வருடங்களாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தனர். அதன் பிறகு இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரவே இந்த ஜோடி பிரேக் அப் செய்து பிரிந்தது.
இந்த விஷயம் அவ்வப்போது மீடியாக்களில் கசிந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி வாய் திறக்காமல் இருந்தனர். ஆனால் இந்த உறவை பற்றி தற்போது நடிகையே பத்திரிகையாளர்கள் முன் குமுறி இருக்கிறார். அதாவது அந்த நடிகர் கல்யாண வயதை தாண்டியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் கட்டிளம் காளையாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
Also read: புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த ஐட்டம் நடிகை.. ஒரே நாளில் தரைமட்டமான கேரியர்
அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று அவர் வீட்டில் முயற்சி செய்தபோது எல்லாம் அதை உதாசீனப்படுத்தி கொண்டே வந்தார். மேலும் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று யாராவது கேட்டால் கூட எனக்கு அந்த பக்குவம் இல்லை, கல்யாண விஷயத்தில் நான் இன்னும் குழந்தை தான் என்று பெருமை பீற்றிக் கொள்வார்.
இவ்வாறு சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கும் அந்த முரட்டு நடிகர் சம்பந்தப்பட்ட இந்த நடிகையுடன் ரகசியமாக குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார். இப்படி அந்த நடிகர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் நடிகையை எட்டு வருடமாக கண்ட்ரோலில் வைத்திருக்கிறார்.
Also read: கிளாமர் காட்டியும் கிடைக்காத வாய்ப்பு.. சாதித்தே தீருவேன் என வாய்ப்புக்காக ஏங்கி கிடக்கும் நடிகை
ஆனால் நாட்கள் செல்ல செல்ல நடிகையை அவர் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். நடிகையிடம் இருந்து போன் வந்தால் கூட அவர் எடுக்காமல் டீலில் விட்டிருக்கிறார். இதனால் கொதித்துப் போன அந்த நடிகை நடிகரை பற்றிய ரகசியங்களை மொத்தமாக மீடியா முன் அவிழ்த்துவிட்டு இருக்கிறார். அதாவது இத்தனை வருட லிவிங் வாழ்க்கையில் ஒரு முறை கூட நடிகை நிம்மதியாக இருந்தது கிடையாதாம்.
தன்னை அந்தரங்க தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்ட அந்த நடிகர் முழு சைக்கோ என்று நடிகை குமுறி வருகிறார். அது மட்டுமில்லாமல் நடிகரால் தனக்கு எந்த விஷயத்திலும் நிம்மதியும், சந்தோஷமும் இல்லை என்பதையும் அவர் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது திரையுலகில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
Also read: அந்தரங்க டார்ச்சர் கொடுத்த திருமணமான நடிகர்.. வதந்தியை சமாளிக்க முடியாமல் மரணித்த 20 வயது நடிகை
