தளபதி 65 படத்தில் வில்லன் நான் இல்லை, அப்படி நடந்தா நல்லாருக்கும்.. ஆசைப்படும் முரட்டு வில்லன்

சமீபத்தில் தளபதி 65 படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தளபதி 65 படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தளபதி 65. ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக உருவாகும் என ஒருபக்கம் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தளபதி 65 படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வும் நடைபெற்று வருகிறது. மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சென்னையில் தொடங்க உள்ளது. இதற்காக தற்போது கோபுரம் ஸ்டூடியோவில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆனால் தளபதி 65 படத்தின் வில்லன் யார் என்பதை மட்டும் படக்குழுவினரிடம் சஸ்பென்சாக வைத்துள்ளனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் தான் தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற செய்தியை கிளம்பிவிட்டனர்.

இதைப்பார்த்த வித்யூத் ஜம்வால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விஜய்க்கு வில்லனாக நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் தளபதி 65 படத்தில் தற்போது வரை தனக்கு வாய்ப்பு வரவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் தளபதி 65 படத்தில் வித்யுத் ஜம்வால் தான் வில்லனாக வேண்டும் என சமூக வலைதளங்களில் அடம் பிடித்து வருகின்றனர்.

vidyut-jammwal-tweet
vidyut-jammwal-tweet
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்