அரைச்ச மாவையே வித்தியாசமாக அரைக்கபோகும் தளபதி 67.. அந்த ஒரு கான்சப்ட் இல்லனா ஹிட்டு கன்ஃபார்ம்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தளபதியின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி கொண்டிருக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் படமாகவே இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்திருந்தார்.

இதனால் மாஸ் ஹீரோவாகவே தளபதியை பார்க்க நினைக்கும் ரசிகர்களுக்கு தளபதியின் 67-வது படத்தைக் குறித்து அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது திரையரங்கில் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதியின் 67-வது படத்தை இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஏற்கனவே தளபதியுடன் தெறி, மெர்சல், கத்தி போன்ற படத்தை தொடர்ந்து 4-வது முறையாக விஜய்-சமந்தா ஜோடி சேர உள்ளது. தளபதி 67 படத்தில் தளபதி விஜய் எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கப் போகிறார் என அவருடைய ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக மாஸ் காட்ட உள்ளார். மேலும் இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோயினையும் வலுவாக பேசும் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே தளபதி விஜய்க்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு சமந்தாவின் கேரக்டரும் செம போல்டாக தளபதி 67 படத்தில் காட்ட திட்டமிட்டிருக்கிறார்.

ஏற்கனவே விக்ரம் திரைப்படம் கைதி படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்பட்டிருக்கும் நிலையில், விஜய் ஏற்கனவே தெறி படத்தில் சமந்தாவுடன் போலீஸ் கெட்டப்பில் வந்திருப்பதால் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக தளபதி 67 இருக்குமோ என்றும் தோன்றுகிறது.

தெறி படத்தில் போதி குறைந்த கான்செப்ட் இருந்ததால் ஹிட் அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால் அதில் கொஞ்சம் போதையில் ஏற்றி ஹிட் கொடுப்பதற்காக மீண்டும் அந்தப் படத்தையே இரண்டாம் பாகமாக எடுக்க அரைச்ச மாவையே அரைக்க போகிறாரா என லோகேஷின் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்