தேசிய அளவில் சூரரைப்போற்றுக்கு போட்டியாக மற்றும் ஒரு தமிழ் படம்.. யார் ஹீரோ என்ன படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு வித்தியாசமான கதையை வைத்து நசீர் எனும் படத்தை கொடுத்தவர் அருண் கார்த்திக். இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் கதாநாயகனாக Koumarane Valavane என்பவர் நடித்துள்ளார்.இப்படம் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ரோட்டர்டம் எனும் விருது விழாவில் பங்கேற்ற உள்ளது ஃபேஸ்டியஸ் இன் பிலிம் அவார்டு போன்று 3 அவார்டுகளை வாங்கியுள்ளது.

தற்போது இப்படம் பெல்போரணி எனும் பிலிம் பெஸ்டிவல் அவார்டு சிறந்த இயக்குனருக்கான பிரிவில் இப்படத்தை இயக்கிய அருண் கார்த்திக் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதேபோல் சூரரைப்போற்று படத்திற்காகவும் சூர்யாவும் சுதா கொங்கரா இந்த விருது விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

suriya-soorarai-pottru-sudha
suriya-soorarai-pottru-sudha

ஆனால் பலரும் சூர்யா மற்றும் சுதா கொங்கரா மட்டுமே சாதனை படைத்தது போல் பல ஊடகங்களிலும் பேசி வருகின்றனர். அதற்கு காரணம் சூர்யாவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே இவருடைய திறமையை மட்டுமே பெரிதாகப் பேசப்பட்டு வருகின்றனர்.

suriya-soorarai-pottru
suriya-soorarai-pottru

எப்படி சூர்யா மற்றும் சுதா கொங்கரா இருவரும் திறமையின் அடிப்படையில் அந்த விருது இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல்தான் அருண் கார்த்திக் மற்றும் Koumarane Valavane இவர்களின் பெயர்களும் அந்த விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திறமை என்பது ஒருவரிடம் மட்டும் இல்லை எல்லாரிடமும் தான் உள்ளது. ஆனால் இவர்களை தவிர மற்ற நடிகர்களை மட்டும் ஏன் பலரும் பெருமையாக பேசுகிறார்கள் என்பது புரியவில்லை.

ஒருவேளை இந்த விருது விழாவில் நசீர் படத்தை இயக்கிய அருண் கார்த்திக் மற்றும் அப்படத்தில் நடித்த Koumarane Valavaneஇவர்கள் இருவரும் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகருக்கான விருது வாங்கிவிட்டால் அப்போது பலரும் இவர்களை பாராட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நசீர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் உலக அளவில் கொண்டு சேர்த்த அருண் கார்த்திக் மற்றும் Koumarane Valavane ஆகிய இருவருக்கும் சினிமா பேட்டை சார்பாக வாழ்த்துக்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்